Marumagal Serial: ஆசை ஆசையாக பெண் பார்க்க வந்த பிரபு.. கடைசியில் காத்திருந்த பெரிய ஆப்பு-marumagal serial today on august 9 indicates prabhu went to see athirai - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: ஆசை ஆசையாக பெண் பார்க்க வந்த பிரபு.. கடைசியில் காத்திருந்த பெரிய ஆப்பு

Marumagal Serial: ஆசை ஆசையாக பெண் பார்க்க வந்த பிரபு.. கடைசியில் காத்திருந்த பெரிய ஆப்பு

Aarthi Balaji HT Tamil
Aug 09, 2024 09:32 AM IST

Marumagal Serial: பிரபு பெண் பார்க்க வீட்டிற்குள் நுழையும் போது வெளியே அதிரையின் வாட்டர் கேன் உடன் வண்டியை பார்க்கிறார். அதைப் பார்த்ததும் நம் மனதிற்கு பிடித்த பெண்ணே நாம் பொண்ணு பார்க்க வந்திருக்கிறோமே என நினைத்து சந்தோஷப்படுகிறார்.

ஆசை ஆசையாக பெண் பார்க்க வந்த பிரபு.. கடைசியில் காத்திருந்த பெரிய ஆப்பு
ஆசை ஆசையாக பெண் பார்க்க வந்த பிரபு.. கடைசியில் காத்திருந்த பெரிய ஆப்பு

பிரபு பெண் பார்க்க வீட்டிற்குள் நுழையும் போது வெளியே அதிரையின் வாட்டர் கேன் உடன் வண்டியை பார்க்கிறார். அதைப் பார்த்ததும் நம் மனதிற்கு பிடித்த பெண்ணே நாம் பொண்ணு பார்க்க வந்திருக்கிறோமே என நினைத்து சந்தோஷப்படுகிறார்.

எந்த பிரச்சனையும் கல்யாணத்தில் வரக்கூடாது

மறுபக்கம் ஆதிரை எனக்கும் அந்த மாப்பிள்ளைக்கும் பார்த்தவுடன் பிடித்து விட வேண்டும் வேறு எந்த பிரச்சனையும் கல்யாணத்தில் வரக்கூடாது என்று நினைக்கிறார் ஆதிரை.

பிரபுவின் நண்பர் பெண்ணை பார் என்று சொல்ல வழக்கம் போல் மாப்பிள்ளை வைக்கப்பட்டு கொண்டு பார்க்க மறுக்கிறார்.

பிரபுவிடம் ஆதிரை காபி கொண்டு செல்வது உடன் ப்ரோமோ முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதால் இந்த திருமண ஏற்பாடு எப்படி செல்லும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

மேலும் இன்றைய எபிசோடை விரிவாக இரவு எட்டு மணிக்கு சன் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நேற்றைய எபிசோட்

பிரபுவிற்கு பெண் பார்க்க போகும் விஷயம் தெரிந்து கொண்டு, அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒருவரை அனுப்பி வைத்து இருக்கிறார் சித்தப்பா மகள் வேல்விழி.

அதை பார்த்த பிரபு , இந்த பெண் எப்படி இருந்தாலும் நாம் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என நினைக்கிறார்.

அம்மா இல்லாமல் போய்விட்டாரே

மறுபக்கம் திருமண கோலத்தில் இருக்கும் தனது மகளை பார்த்து சிவப்பிரகாசம், இதை பார்க்க அம்மா இல்லாமல் போய்விட்டாரே என்று வருத்தம் தெரிவிக்கிறார். ஆனால் அனைத்தையும் பாசிட்டிவாக பார்க்கும் ஆதிரை இப்போது, “ அம்மா உங்க கண் வழியாக என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்" .

முதலில் சிவப்பிரகாசம் சம்பவ இடத்திற்கு செல்ல, தேவா அங்கே வீடியோ பார்த்துக் கொண்டு அவரை கிண்டல் அடித்துக் கொண்டிருந்தான். இந்த நிலையில் சிவப்பிரகாசம், தேவா நீ செய்வது கொஞ்சம் கூட சரியல்ல. 

ஏரியா விட்டு ஏரியா

இப்படி வாட்டர் கேன் வண்டியை பிடித்து வைத்துக் கொண்டு, என்னுடைய தொழிலை கெடுப்பது நல்லதல்ல என்று சொல்ல, டென்ஷன் ஆன தேவா நான் உன்னிடம் அப்போதே சொல்லி இருக்கிறேன். ஏரியா விட்டு ஏரியா வாட்டர் கேன் போடக்கூடாது என்று.. அப்படி இருக்கையில், நான் சொன்ன பிறகும் நீ வாட்டர் கேன் பிசினஸ் இங்கு நடத்தினால் உன்னை என்ன செய்வது என்று கேட்கிறான்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.