MARUMAGAL SERIAL: எத்தனை குழப்பம்.. பிரபு, ஆதிரை திருமண நிச்சயதார்த்தம் நடக்குமா?-marumagal serial today on august 22 204 episode promo indicates problem in engagement - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: எத்தனை குழப்பம்.. பிரபு, ஆதிரை திருமண நிச்சயதார்த்தம் நடக்குமா?

MARUMAGAL SERIAL: எத்தனை குழப்பம்.. பிரபு, ஆதிரை திருமண நிச்சயதார்த்தம் நடக்குமா?

Aarthi Balaji HT Tamil
Aug 22, 2024 03:38 PM IST

MARUMAGAL SERIAL: ஆதிரையின் வளர்ப்பு தாய் எப்படியாவது நிச்சயதார்த்தம் நடக்க கூடாது என்று முனைப்பில் இருக்கிறார். மறுபக்கம் வேல்விழி தனது தந்தையுடன் சேர்ந்து, அவர்களை பிரிக்க வேண்டும் என நினைக்கிறார்.

MARUMAGAL SERIAL: எத்தனை குழப்பம்.. பிரபு, ஆதிரை திருமண நிச்சயதார்த்தம் நடக்குமா?
MARUMAGAL SERIAL: எத்தனை குழப்பம்.. பிரபு, ஆதிரை திருமண நிச்சயதார்த்தம் நடக்குமா?

இன்றைய எபிசோட்

இந்நிலையில் மருமகள் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 22 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

ஆதிரையின் வளர்ப்பு தாய் எப்படியாவது நிச்சயதார்த்தம் நடக்க கூடாது என்று முனைப்பில் இருக்கிறார். மறுபக்கம் வேல்விழி தனது தந்தையுடன் சேர்ந்து, அவர்களை பிரிக்க வேண்டும் என நினைக்கிறார். 

ஆதிரையின் தாய், “ பிரபு, ஆதிரையிடம் பேசும் முன்பு நான் பேச வேண்டும். ஆதிரையை பற்றி இல்லாத தப்பான எல்லாத்தையும் சொல்லிவிட வேண்டும் “ என நினைக்கிறார். 

திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு தந்தையுடன் வருகிறாள் வேவிழி. அவரை பார்த்து மேகலை, “ நீங்க எல்லாரும் எதற்கு இங்கு வந்தீங்க” என்று கேட்க உடனே வேல்விழி, “ நாங்க இந்த திருமண நிச்சயத்தார்த்தம் நடக்க விடாமல் தடுக்க போகிறோம் “ என கடுப்பாக சொல்கிறார். 

வேல்விழி வந்து இருப்பதை பார்த்து பிரபு பயந்து போனார். ஆதிரையிடம் சென்று, வேல்விழி வந்து சொன்னால் எதையும் நம்ப வேண்டாம் என்று சொல்கிறான். உடனே ஆதிரை, இப்போ தான் நான் அவளை செவியை பேத்துட்டு வந்தேன் “ என சொல்கிறாள்.

கடந்த எபிசோட்டில் என்ன நடந்தது

இந்த நிலையில், காலை நிச்சயதார்த்தத்திற்கு தேவையான எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றன. இதற்கிடையே நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதற்காக மேகலை குடும்பம் மூன்று திட்டங்களை தீட்டுகிறது அதன்படி, மேகலையின் கணவர் தேவாவை அழைத்து அடியாட்களை வைத்து, இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்து என்று சொல்ல, அவன் முதலில் வீட்டிற்குள் குழப்பத்தை உண்டு பண்ணுங்கள். அதை வைத்து நான் உள்ளே புகுந்து அடித்து துவம்சம் செய்கிறேன் என்கிறான்.

வேள்விழியோ, என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்கள் எனக்கு இந்த நிச்சயதார்த்தம் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள். இதற்கிடையே தில்லையும் இந்த நிச்சயதார்த்தத்தில் ஏதாவது நடக்குமோ என்று பயப்படுகிறான்.

இன்னொரு பக்கம் வேல்விழி, பிரபுவுக்கு போன் செய்து நிச்சயதார்த்தத்துக்கு நாங்கள் வந்தால் பிரச்சினை வந்து, நிச்சயதார்த்தம் நின்றுவிடும் என்பதால்தான் நீ எங்களை அழைக்கவில்லை; நீ சரியான பயந்தாங்கோலி என்று சொல்ல, பிரபு உங்கள் சவகாசமே எங்களுக்கு வேண்டாம் என்பதற்காகத் தான் உங்களை நிச்சயதார்த்தத்திற்கு அழைக்கவில்லை என்று சொல்கிறான். இறுதியில் வேல்விழி உனது நிச்சயதார்த்தத்தை நான் நிறுத்திக் காண்பிக்கிறேன் என்று சவால் விடுகிறாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.