Marumagal: ரூ.700க்கு நிச்சயதார்த்த புடவையா? - பிரபு சிக்கனத்திற்கு ஒரு அளவே இல்லையா பாஸ்?
Marumagal: அண்ணன் செய்வது தவறு என்று தம்பி ஒருவர் தான் தட்டிக் கேட்கிறார். “ யாராவது 700 ரூபாய்க்கு நிச்சயதார்த்த புடவை எடுப்பார்களா? பெண் வீட்டார் உன்னை என்ன நினைப்பார்கள்? என்று தைரியமாக கேள்வி கேட்கிறார்.

ரூ.700க்கு நிச்சயதார்த்த புடவையா? - பிரபு சிக்கனத்திற்கு ஒரு அளவே இல்லையா பாஸ்?
Marumagal: சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியலில், இன்று ( ஆகஸ்ட் 19) ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த மருமகள் சீரியல் மாலை 8 மணிக்கு, சன் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிரபு தனது வருங்கால மனைவி ஆதிரைக்கு நிச்சயதார்த்த புடவை எடுத்து கொண்டு வந்து தனது தந்தையிடம் கொடுக்கிறார்.
அதற்கு அவரின் தந்தை, “ இந்த புடவையின் விலை என்ன? “ என்று கேட்க, அவர், “ பெருமையாக சிரித்து கொண்டே.. 700 ரூபாய் “ என சொன்னார். அனைவரும் அதிர்ச்சி அடைந்து ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்து கொள்கிறார்.