Marumagal: மோதிரம் எங்கே? - கேள்வி கேட்ட பிரபு.. சிக்கி தவிக்கும் ஆதிரை - மருமகள் சீரியல்-marumagal serial today episode promo indicates prabhu and athirai fights - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal: மோதிரம் எங்கே? - கேள்வி கேட்ட பிரபு.. சிக்கி தவிக்கும் ஆதிரை - மருமகள் சீரியல்

Marumagal: மோதிரம் எங்கே? - கேள்வி கேட்ட பிரபு.. சிக்கி தவிக்கும் ஆதிரை - மருமகள் சீரியல்

Aarthi Balaji HT Tamil
Aug 31, 2024 09:56 AM IST

Marumagal: ஆதிரையும், பிரபுவும் சந்திக்கிறார்கள். அப்போது பிரபு நிச்சயத்திற்கு தான் போட்ட மோதிரம் எங்கே என்று ஆதிரையை பார்த்து கேட்கிறார்.

Marumagal: மோதிரம் எங்கே? - கேள்வி கேட்ட பிரபு.. சிக்கி தவிக்கும் ஆதிரை - மருமகள் சீரியல்
Marumagal: மோதிரம் எங்கே? - கேள்வி கேட்ட பிரபு.. சிக்கி தவிக்கும் ஆதிரை - மருமகள் சீரியல்

நிச்சய மோதிரம் எங்கே?

மறுபக்கம் ஏகாம்பரம் வீட்டிற்கு சென்று தன் மகன் திருமணத்தை ஏன் நடத்த விட மாட்டார்கள் என கேட்டு சண்டை போடுகிறார். அதற்கு அவர் உன் மகன் என்மேல் வழக்கு தொடர்ந்தான் அதனால் அப்படி செய்வேன் என்று கர்வமாக பேசுகிறார்.

இறுதியாக ஆதரையும், பிரபுவும் சந்திக்கிறார்கள். அப்போது பிரபு நிச்சயத்திற்கு தான் போட்ட மோதிரம் எங்கே என்று ஆதிரையை பார்த்து கேட்கிறார். மோதிரம் தொலைந்து போன விஷயத்தை எப்படி சொல்வது என்று தெரியாமல் அதிரை முழிக்கிறார். அத்துடன் இன்றைய ( ஆகஸ்ட் 31 ) எபிசோடில் காண ப்ரோமோ முடிந்தது.

நேற்றைய எபிசோட்

மருமகள் சீரியலின் நேற்றைய ( ஆகஸ்ட் 30 ) எபிசோட்டில், அம்மாவின் டைரியை படித்த ஆதிரை, அம்மாவின் ஆசைப்படி கல்யாணத்தை நடத்த வேண்டும் என்றால், அதற்கு மனோகரி அம்மா பத்திரத்தை கொடுக்க சம்மதிக்க வேண்டுமே என்று யோசிக்கிறார்.

இன்னொரு பக்கம் தில்லை, ஏகாம்பரத்து உடனான பிரச்னையை நேரடியாகவே பேசி தீர்த்து விடலாம் என்று கிளம்பிவிட்டார். அவர் வீட்டிற்கு சென்று என்ன தான் பிரச்னை எதனால் தொல்லை செய்து மகன் திருமணத்தை நடத்த தடையாக இருக்கிறார் என கேட்க நினைத்தார்.

தன் அப்பாவை பற்றி பேசியதால் கடும் மன வருத்ததில் இருக்கிறார் ஆதிரை. இதனால் நிச்சயத்தார்த்தமான மோதிரத்தை கூட அவர் தூக்கி வீசிவிட்டார்.

ஆதிரைக்கு போன் செய்யலாமா? வேண்டமா?

இதனால் வருத்தத்தில் இருந்த பிரபு, ஆதிரைக்கு போன் செய்யலாமா? வேண்டமா? என்று வழக்கம் போல் குழப்பத்தில் இருந்தார். உடனே தனது நண்பரான சுவாமி வீட்டிற்கு சென்று, வழக்கம் போல் என்ன செய்வது என்று தெரியாமல் யோசனை கேட்கிறார். உடனே அவர் ஆதிரை போன் செய்யவில்லை என்றால் என்ன, நீ போன் செய்து சமாதானம் செய்துவிட வேண்டியது தானே? என்று கேட்கிறார். 

நீண்ட யோசனைக்கு பிறகு, என்னை மன்னித்துவிடு என்று சொல்ல, ஆதிரை உங்களை மன்னிக்க முடியாது என்று கூறி போனை வைத்தார். பிறகு எப்படியோ சமாதனம் செய்து ஆதிரையை தன் வழிக்கு கொண்டு வந்தார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.