Marumagal serial: பட்ஜெட் பார்த்த வேலை.. கல்யாணத்திற்கு நோ சொன்ன பிரபு.. கதறும் ஆதிரை.. மருமகள் சீரியலில் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: பட்ஜெட் பார்த்த வேலை.. கல்யாணத்திற்கு நோ சொன்ன பிரபு.. கதறும் ஆதிரை.. மருமகள் சீரியலில் இன்று!

Marumagal serial: பட்ஜெட் பார்த்த வேலை.. கல்யாணத்திற்கு நோ சொன்ன பிரபு.. கதறும் ஆதிரை.. மருமகள் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Published Sep 03, 2024 08:46 AM IST

Marumagal serial: கல்யாணத்தை நிறுத்த நீ ஏதாவது செய்தால், என்னுடைய இன்னொரு முகத்தை நீ நிச்சயமாக பார்ப்பாய் என்று எச்சரித்தார். இதனால் மனோகரிக்கும் சிவப்பிரகாசத்துக்கும் இடையே சண்டை மூண்டது. - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal serial: பட்ஜெட் பார்த்த வேலை.. கல்யாணத்திற்கு நோ சொன்ன பிரபு.. கதறும் ஆதிரை.. மருமகள் சீரியலில் இன்று!
Marumagal serial: பட்ஜெட் பார்த்த வேலை.. கல்யாணத்திற்கு நோ சொன்ன பிரபு.. கதறும் ஆதிரை.. மருமகள் சீரியலில் இன்று!

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

மருமகள் சீரியலில் நேற்றைய தினம் ஆதிரையும், பிரபுவும் வீட்டிற்குள் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த தில்லையும் சிவப்பிரகாசமும் பெல் அடிக்க இருவரும் அலறினர். இதற்கிடையே பிரபு, நான் தூங்குவது போல் நடிக்கிறேன். நீ எதுவும் தெரியாதது போல இருந்து கொள் என்று சொல்ல, அவர்கள் திட்டப்படியே நடந்தது. அதன் பின்னர் எதுவும் தெரியாதது போல வந்த பிரபு ஆதிரைக்கும், சிவபிரகாசத்திற்கும் பாதாம் பால் போட்டுக்கொடுக்கச் சொன்னான். இந்த நிலையில் யாருக்கும் எதுவும் சந்தேகம் வராமல் பிரச்சினையை சுமூகமாக முடிந்தது. இதற்கிடையே தில்லையை தனியாக அழைத்து பேசிய பிரபு, கல்யாண செலவை மிகவும் சுருக்கமாக செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சிவப்பிரகாசத்திடம் எடுத்துக் கூறிவிடுங்கள் என்று கண்டிப்புடன் கூறினான்.

சொல்ல முடியாமல் பிரபு திணறினான்.

ஆனால் வீட்டிற்கு வந்த சிவபிரகாசமோ கல்யாணத்தை மண்டபத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உள்ளே நுழைந்த பிரபு, சிட்டியில் இந்த நேரம் மிகவும் சீசன் நிறைந்த நேரம் என்பதால் மண்டபமே கிடைக்கவில்லை என்று கூறினான். ஆனால் அவனுக்கு பதிலடி கொடுத்த சிவப்பிரகாசம், தான் வாட்டர் கேன் போடும் மண்டபக்காரரே மண்டபத்தை தனக்கு கொடுத்து விட்டார் என்றும் மற்றவர்களுக்கு 4 லட்சம் வாடகை கேட்கும் அவர் எனக்கு 2 லட்சம் தான் கேட்டிருக்கிறார் என்று கூறினார்.

இதையடுத்து எதுவும் சொல்ல முடியாமல் பிரபு திணறினான். தொடர்ந்து பேசிய சிவப்பிரகாசம் அதேபோல கேட்ரிங்கையும் நானே பேசி விட்டேன். அதற்கான செலவு 4 லட்சம் என்றும் சொன்னதுதான் மிச்சம். பிரபு என்ன செய்வது என்று தெரியாமல் அப்பாவை கடு கடுவென பார்த்தார். அத்தோடு சிவப்பிரகாசம் விடவில்லை. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக கல்யாணம் இருக்க வேண்டும் என்று சொல்லி கல்யாணத்தில் அதற்கான ஏற்பாடுகளையும் செய்யப் போவதாக சொல்ல, பிரபு குடும்பத்தினர் மேலும் அதிர்ச்சி அடைந்து நின்றனர் மொத்தமாக கல்யாணத்திற்கு பெரிய செலவு வரும் என்பதை நினைத்த பிரபு வீட்டில் மயக்கம் போட்டு விழுந்து விட்டான்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.