Marumagal Serial: தில் விக்ரமாக மாறிய தில்லை..கல்யாணத்தில் பிரபுவுக்கு சிவபிரகாசம் வைத்த வேட்டு-மருமகள் சீரியலில் இன்று!-marumagal serial today episode on september 02 2024 aathirai prabhu discuss - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: தில் விக்ரமாக மாறிய தில்லை..கல்யாணத்தில் பிரபுவுக்கு சிவபிரகாசம் வைத்த வேட்டு-மருமகள் சீரியலில் இன்று!

Marumagal Serial: தில் விக்ரமாக மாறிய தில்லை..கல்யாணத்தில் பிரபுவுக்கு சிவபிரகாசம் வைத்த வேட்டு-மருமகள் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 02, 2024 12:00 PM IST

Marumagal Serial: 8 லட்சம் கொடுத்தால் போதும், மொத்த வேலையையும் அவரே பார்த்துக் கொள்வார் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதை கேட்ட பிரபு, கல்யாணம் முடிவதற்குள், நம் பணத்தை முழுவதுமாக காலி செய்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று நினைத்து மயக்கம் போட்டு விழுந்து விட்டான். - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal Serial: தில் விக்ரமாக மாறிய தில்லை..கல்யாணத்தில் பிரபுவுக்கு சிவபிரகாசம் வைத்த வேட்டு-மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: தில் விக்ரமாக மாறிய தில்லை..கல்யாணத்தில் பிரபுவுக்கு சிவபிரகாசம் வைத்த வேட்டு-மருமகள் சீரியலில் இன்று!

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

நேற்றைய எபிசோடில் சிவப்பிரகாசம் தில்லையை பார்த்து விட்டு வரலாம் என்று சொல்லி கிளம்ப, வழியில் மனோகரி வந்து விட்டாள். அவளிடம் சிவப்பிரகாசம் நான் தில்லையை பார்க்கச் செல்கிறேன்.. நீ வருகிறாயா என்று கேட்க, அப்படியானால் நீங்கள் என்னை வரவேண்டாம் என்று சொல்கிறீர்களா என்று அவள் குதர்க்கமாக பேசினாள்.

இதையடுத்து ஆதிரையை அழைத்துக் கொண்டு சிவப்பிரகாசம் தில்லை வீட்டிற்கு செல்கிறார், வழியிலேயே சிவப்பிரகாசம் தில்லையை பார்த்துவிட, ஆதிரை நான் முன்னே செல்கிறேன் என்று சொல்லி, பிரபு வீட்டிற்கு வந்தாள். வீட்டில் அனைவரும் கோயிலுக்கு சென்று இருக்க, பிரபு மட்டும் வீட்டில் இருந்தான். இதையடுத்து ஆதிரையிடம் பிரபு தான் போட்ட நிச்சயதார்த்த மோதிரத்தை எங்கே என்று கேட்க, ஆதிரை அதைப்பற்றி தான் நான் உங்களிடம் பேச வந்தேன் என்று கூறியதோடு, எங்கு விழுந்தது என்று தெரியவில்லை என்று பதற்றமடைந்தாள்.

நிம்மதியடைந்த பிரபு

தன் மீது உள்ள வெறுப்பில் தான் ஆதிரை மோதிரத்தை தூக்கிப்போட்டு விட்டாள் என்று நினைத்துக் கொண்டிருந்த பிரபுவுக்கு, இது மன நிம்மதியை கொடுத்தது. இதையடுத்து தன்னிடம் இருந்த மோதிரத்தை ஆதிரைக்கு அவன் போட்டு விட்டான்.

இதற்கிடையே தன்னுடைய மகனுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கும் ஏகாம்பரத்தை மிரட்டுவதற்காக தில்லை நேரடியாக அவரது வீட்டிற்கு சென்றிருந்தார். எப்போதும் சாதுவாக பேசும் தில்லை, இப்போது கொஞ்சம் மாறுதலாக கண்டிப்போடு பேசினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஏகாம்பரம் குடும்பத்தினர், பதிலுக்கு சண்டைக்கு நின்றார்கள். ஆனாலும் தில்லை விடவில்லை. தொடர்ந்து எதிர்த்து பேசிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் என் மீது என்ன கல் வேண்டும் என்றாலும் எரியுங்கள். ஆனால் என் மகன் மீது சிறு துரும்பு பட்டால் கூட நான் தாங்க மாட்டேன். அதன் பின்னர் இந்த உலகத்திலேயே நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று உச்சகட்டமாக எச்சரித்து விட்டு கிளம்பினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.