Marumagal Serial: கையில் பூங்கொத்து.. சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ஆதிரை - சந்தேகத்தில் தாய்-marumagal serial today episode on august 15 indicates prabhu and athirai meeting - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: கையில் பூங்கொத்து.. சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ஆதிரை - சந்தேகத்தில் தாய்

Marumagal Serial: கையில் பூங்கொத்து.. சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ஆதிரை - சந்தேகத்தில் தாய்

Aarthi Balaji HT Tamil
Aug 15, 2024 10:44 AM IST

Marumagal Serial: பிரபுவின் தந்தை அவரின் தாய்யிடம், “ பிரபு சொன்ன எந்த கண்டிஷனும் ஆதிரைக்கு சொல்லவே இல்லை. அவருக்கு தெரியவே தெரியாது என சொல்ல போகிறேன் ” என சொல்கிறார்.

Marumagal Serial: கையில் பூங்கொத்து.. சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ஆதிரை - சந்தேகத்தில் தாய்
Marumagal Serial: கையில் பூங்கொத்து.. சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ஆதிரை - சந்தேகத்தில் தாய்

இன்றைய ப்ரோமோ

அதில் பிரபு, ஆதிரை சந்தித்து தனது வருங்கால மனைவிக்காக பூங்கொத்து கொடுக்கிறார். பிரபு, " வேல்விழியை நீங்கள் அடித்த காரணத்தினாலேயே, 7 ஜென்மமும் நீங்களே எனக்கு மனைவியாக வர வேண்டும் “ என கேட்டு கொள்கிறார். இவர்கள் பேசுவதை காரில் இருந்த படி வேல்விழி முறைத்து கொண்டு பார்க்கிறார். 

பிரபுவின் தந்தை அவரின் தாய்யிடம், “ பிரபு சொன்ன எந்த கண்டிஷனும் ஆதிரைக்கு சொல்லவே இல்லை. அவருக்கு தெரியவே தெரியாது என சொல்ல  போகிறேன் ” என சொல்கிறார். பாட்டி என்ன நடக்க போகிறதோ என பயத்துடன் தன் மகனை பார்க்கிறார். 

சிரித்த முகத்தோடு ஆதிரை

பிரபுவை சந்தித்துவிட்டு பூங்கொத்துடன் சிரித்த முகத்தோடு வீட்டிற்குள் வருகிறார் ஆதிரை. அதை பார்த்த அவரின் தாய், எங்க டீ போயிட்டு வருகிறாய்? என கேட்க. தங்கை உடனே தண்ணீர் கேன் போட போவதாக அக்கா சொல்லிட்டு தானே போனாய் “ என கேட்கிறார். உடனே அதற்கு அவரின் தாய், “ தண்ணீர் கேன் போட போனால் எப்படி கையில், பூங்கொத்து வரும் “ என கேள்வி கேட்கிறார். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.

நேற்றைய ப்ரோமோ

திருமணத்தில் பெண் பார்க்கும் வைபவத்தில் பிரபுவும் ஆதிரையும் தனித்தனியாகப் பேசுகின்றனர். அப்போது மனதில் ஆதிரை, ’ஆரம்பத்தில் பிரபு நடந்துகொள்ளும் விதத்தை வைத்து இவருக்கெல்லாம் யார் மனைவியாக வரப்போறாங்கனு யோசிச்சேன். ஆனால், எப்போது, எங்களுடைய குடும்பத்தையும் பிரபு சமமாகப் பார்க்கிறார் என்பது தெரிந்ததும் பிரபுதான் என் புருஷன்னு முடிவுபண்ணிட்டேன்’ என மனதுக்குள் நினைத்து கொள்கிறார்.

எதிரிக்கு எதிரி நண்பன்

ஆதிரையைப் பார்த்த பிரபு மனதுக்குள், ‘எதிரிக்கு எதிரி நண்பன். எப்போது அந்த வேல்விழியை ஆதிரை அடிச்சால் என்று தெரிஞ்சதோ.. அப்பவே முடிவுபண்ணிட்டேன், ஆதிரை தான் என் பொண்டாட்டினு’’ என்று மனதுக்குள் நினைக்கிறார், பிரபு. பின் வீட்டிற்குச் சென்றதும் தனிப்பட்ட முறையில் பிரபு தனக்கு உங்களைப் பிடித்ததுவிட்டதாகவும், தங்களுக்கு ஓகேவா என போனில் கேட்க, டபுள் ஓகே என கூறுகிறார்.  

நிச்சியதார்த்தம் நடக்க போவதால் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இனிப்பு கொடுக்கிறார் பிரபு. ஆனால் அவர் வழக்கம் போல் தேன் மிட்டாய், கொடுத்து காசை மிச்சம் செய்து உள்ளார் பிரபு. இதற்கு ஒரு எல்லையே இல்லையா பாஸ்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.