Marumagal Serial: பிரகாசத்தை அடிக்கப்பாய்ந்த ஏகாம்பரம்.. ஆட்டம் கண்ட ஆதிரை.. மருமகள் சீரியலில் இன்று!-marumagal serial promo today on august 27 2024 indicates aathirai hold a hand ekambaram in her engagement function - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: பிரகாசத்தை அடிக்கப்பாய்ந்த ஏகாம்பரம்.. ஆட்டம் கண்ட ஆதிரை.. மருமகள் சீரியலில் இன்று!

Marumagal Serial: பிரகாசத்தை அடிக்கப்பாய்ந்த ஏகாம்பரம்.. ஆட்டம் கண்ட ஆதிரை.. மருமகள் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 27, 2024 02:24 PM IST

Marumagal Serial: ஏகாம்பரம், சிவபிரகாசத்தை அடிக்கப் போகிறார். இதற்கிடையே உள்ளே புகுந்த ஆதிரை ஏகாம்பரத்தின் கையை பிடித்து விடுகிறாள். அடுத்தது என்ன நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal Serial: பிரகாசத்தை அடிக்கப்பாய்ந்த ஏகாம்பரம்.. ஆட்டம் கண்ட ஆதிரை.. மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: பிரகாசத்தை அடிக்கப்பாய்ந்த ஏகாம்பரம்.. ஆட்டம் கண்ட ஆதிரை.. மருமகள் சீரியலில் இன்று!

தொடர்ந்து ஏகாம்பரம், சிவப்பிரகாசத்தை என்னுடைய வீட்டில் வாட்டர் கேன் போட்டு பிழைப்பு நடத்துகிற நீ என்னையே கை நீட்டி அடிப்பது போலவா பேசுகிறாய் என்று கூறி, அவரை அடிக்கப் போகிறார். இதற்கிடையே உள்ளே புகுந்த ஆதிரை ஏகாம்பரத்தின் கையை பிடித்து விடுகிறாள். அடுத்தது என்ன நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

ஆதிரையின் நிச்சயதார்த்தத்தில் பெண் வீட்டார் தரப்பில் நலங்கு வைத்துக் கொண்டிருக்க அங்கு வரும் ஏகாம்பரம் தரப்பு, இது நம் வழக்கத்திலேயே கிடையாது என்று கூறி, அதை பிரச்சினையாக்கி நிச்சயதார்த்ததை நிறுத்த முயல்கிறது. இதில் கொந்தளித்த பிரபு உங்களை இந்த நிச்சயதார்த்தத்திற்கு யாருமே அழைக்கவே இல்லை; முறையாக உங்களை அழைக்காமல் இங்கு வந்து, நீங்கள் முறையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்களே.. உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது என்று கேட்கிறான். 

ஆனால் தமிழோ, நீ சின்ன பையன் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்; அமைதியாக இரு என்று சொல்லி அவனை அடக்க முயல்கிறாள். இதற்கிடையே தமிழிடம் மணிமேகலை, பிரபு இருக்கும் கோபத்திற்கு உங்களை அடித்து விடுவான் என்று மிரட்டி விட, அவள் ஏகாம்பரத்திடமும், வேல்விழியிடமும் சென்று இந்த விஷயத்தை சொல்கிறாள். அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நிச்சயதார்த்த வேலைகள் தொடர்கிறது.

கிண்டல் அடித்த வேல்விழி

நிச்சயதார்த்த தாம்பளம் மாற்றும் சமயத்தில் உள்ளே வரும் ஏகாம்பரம் இந்த நிச்சயதார்த்தம் நடக்கக்கூடாது என்று சொல்கிறார். இதை கேட்டு கோபம் அடைந்த பிரபு அதைக் கேட்க நீங்கள் யார் என்று வார்த்தையை விட, வேல்விழி பிரபுவிடம் நீ உன் சித்தப்பாவிடம் பேசிக் கொண்டிருப்பதை மறந்து விடாதே என்று எச்சரிக்கிறாள். இதற்கிடையே ஆதிரை பிரபுவை நிதானப்படுத்தி, நீங்கள் பேசுங்கள், ஆனால் அமைதியாக பேசுங்கள் அப்போதுதான் இந்த பிரச்சினை சண்டையில் முடியாமல் சமாதானத்தில் முடியும் என்று சொல்கிறாள். இதையடுத்து பிரபு அமைதி ஆகிறான். இதை வேல்விழி கிண்டல் அடிக்கிறாள். 

இதற்கிடையே மணிமேகலை உள்ளே புகுந்து ஏன் பிரச்சினை செய்கிறீர்கள் என்று கேட்க, மணிமேகலையை மேடையில் வைத்து கேவலமாக பேசுகிறார் ஏகாம்பரம். இதை ஏகாம்பரத்தின் அம்மா கண்டிக்க, அவரிடம் நானும் உன் மகன்தான், நானும் உங்களுக்கு நல்லது தான் நினைப்பேன் என்று சொல்கிறான். 

இதற்கிடையே பேச ஆரம்பித்த தில்லை நீங்கள் தயவு செய்து பிரச்சினை கொடுக்காதீர்கள். என்னுடைய மூத்த மகனுக்கு நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும். நம்முடைய பிரச்சினைகள் அனைத்தையும் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று கூறுகிறான். ஆனால் அதற்கு ஏகாம்பரம் ஒத்து வர மறுக்கிறான். இந்த பரபரப்பிற்கிடையே நிச்சயதார்த்தம் நடந்ததா இல்லையா என்பதை இன்றைய நாள் எபிசோடில் பார்க்கலாம்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.