Marimuthu:பெண்ணுக்கு நம்பர் கொடுத்தாரா எதிர்நீச்சல் நடிகர்? - கிளம்பியது சர்ச்சை
எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்து புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
எதிர்நீச்சல் தொடரில் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருப்பவர், மாரிமுத்து. ஆணாதிக்கம் கொண்ட நபராக நடித்து வரும் அவரின் ரோலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் பிரபலமாக இருக்கும் இந்த நிலையில் அவர் குறித்த சர்ச்சை ஒன்று வளைத்தளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
அதாவது, ட்விட்டர் தளத்தில், 18 பிளஸ் கண்டன்டுகளை போடும் கணக்கு ஒன்றில் இருந்து ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் இருக்கும்புகைப்படம் பதிவிடப்பட்டு இருந்தது. அதில், Can I call you என எழுதப்பட்டு இருக்கிறது.
அதற்கு நடிகர் மாரிமுத்துவின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய ட்விட்டர் கணக்கில் இருந்து உடனடியாக ரிப்ளை செய்யப்பட்டு இருந்தது. அதில், “yes என குறிப்பிட்டு அவரின் செல்போன் எண்” கொடுக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த மாரிமுத்துவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, இவருக்கு எதற்கு இந்த வேலை.
சமூக வலைத்தளங்களில் இது குறித்து விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், நடிகர் மாரி முத்துவின் மகன் அகிலன் இதற்கு விளக்கம் அளித்து உள்லார்.
அவர் கூறுகையில், “ அந்த பதிவில் கமெண்ட் செய்து இருப்பது என் தந்தையின் அக்கவுண்ட் கிடையாது. அவரின் போன் நம்பர் எல்லோருக்கும் தெரியும். அதனால் யாரோ இதனை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்” என கூறி உள்ளார். அகிலனின் இந்த விளக்கத்திற்கு பிறகு அந்த போலி பதிவு டெலிட் செய்யப்பட்டது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்