மேஜர் முகுந்தின் ஜாதி பேர் சொல்ல டைரக்டருக்கு துப்பு இல்ல! உங்களுக்கு எல்லாம் என்ன கேடு? எகிறிய மதுவந்தி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மேஜர் முகுந்தின் ஜாதி பேர் சொல்ல டைரக்டருக்கு துப்பு இல்ல! உங்களுக்கு எல்லாம் என்ன கேடு? எகிறிய மதுவந்தி

மேஜர் முகுந்தின் ஜாதி பேர் சொல்ல டைரக்டருக்கு துப்பு இல்ல! உங்களுக்கு எல்லாம் என்ன கேடு? எகிறிய மதுவந்தி

Malavica Natarajan HT Tamil
Nov 05, 2024 09:50 AM IST

அமரன் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் என்ன ஜாதின்னு சொல்ற அளவுக்கு படம் எடுத்த டைரக்டருக்கு துப்பு இல்லை என ஒய்.ஜி. மதுவந்தி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

மேஜர் முகுந்தின் ஜாதி பேர் சொல்ல டைரக்டருக்கு துப்பு இல்ல! உங்களுக்கு எல்லாம் என்ன கேடு? எகிறிய மதுவந்தி
மேஜர் முகுந்தின் ஜாதி பேர் சொல்ல டைரக்டருக்கு துப்பு இல்ல! உங்களுக்கு எல்லாம் என்ன கேடு? எகிறிய மதுவந்தி

ஒற்றை விரலால் பதிலடி

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதுவந்தி, தமிழ்நாட்டில் திமுக அமைச்சர் ஒருவர் சனாதனம் ஒழிக எனக் கருத்து தெரிவித்து தற்போதுவரை அதற்கு மன்னிப்பு கேட்கவில்லை. அப்படி சனாதனம் ஒழிக எனக் கோஷமிடும் கும்பலுக்கு 2026 தேர்தலில் வாக்களிக்காமல் ஒற்றை விரலால் நாம் பதிலடி கொடுப்போம்.

டைரக்டருக்கு துப்பு வேண்டும்

ஒருவரைப் பற்றி படம் எடுத்தால், அவர் எந்த சமுதாயத்தில் இருந்து வருகிறார் என்பதைக் கூறவும் டைரக்டருக்கு துப்பு வேண்டும். உள்ளதை அப்படியே சொல்ல தைரியும் வேண்டும். அவ்வளவு பெரிய ராணுவ அதிகாரியைப் பற்றி ஒருவர் படம் எடுக்கிறார். அதுவும் தியேட்டர்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்தப் படத்தில் மற்ற காட்சிகளில் எல்லாம் கவனம் செலுத்திய டைரக்டர், முகுந்த் வரதராஜன் ஒரு பிராமணர் என்று காட்டுவதில் என்ன கேடு வந்துவிட்டது. மற்ற சமூகத்தில் இருந்து வந்தவர்களை ஆஹா ஓஹோ என பாராட்டி படம் எடுக்கிறீர்கள், போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்றெல்லாம் பாடினீர்கள். அதையும் நாங்கள் வரவேற்றோம்.

பிராமணர் என்றால் மூடி மறைக்கிறீர்கள்

ஆனால், இவர் ஒரு பிராமணர் என சொல்லிக் கொள்வதில் என்ன வெக்கம். அப்படி மூடி மறைத்து ஒரு படம் ஏன் எடுக்க வேண்டும். நான் படத்தை பற்றி ஒரு குறையும் சொல்லல. ஆனா, இந்த சிந்தனை ஏன் வந்திருக்கு. இதுக்கு பெயர் தான் பயம்.

இவரோட சமூக அடையாளத்தை சொல்லிவிட்டால் படம் நிற்காது, விநியோகஸ்தர்களை புக் செய்ய முடியாது. இந்த பயத்தோடே வாழ்ந்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. தயவு செய்து பயத்தைப் போக்கி களத்தில் இறங்கி போராட வேண்டிய விஷயங்களுக்கு போராட வேண்டும். டைரக்டர் யாரைப் பார்த்து பயப்படுகிறார்?

பட வாய்ப்புகள் இல்லை என்றால் கவலை இல்லை

நான் சினிமாத் துறையில் இருந்து கொண்டே தான் இந்தக் கேள்வியை கேட்கிறேன். இதனால், எனக்கு பட வாய்ப்புகளே வரவில்லை என்றாலும் அதைப்பற்றி கவலையில்லை எனக் கூறியுள்ளார்.

மற்ற சமூதாயத்தைப் பற்றி படம் எடுத்தால் அதைப் பற்றி நேரடியாக பேசுகிறீர்கள். பிராமணர் சமூகத்தினர் என வந்தால் மட்டும் அதை ஏன் மறைக்கிறீர்கள்?

பிராமண சமுதாயம் மிகப் பெரியது. அங்குள்ள மக்கள் இதுவரை பெருந்தன்மையாக இருந்து விட்டார். இந்த சமூகத்தினர் மற்ற சமூகத்தினரை கொச்சைப்படுத்தி பேச வேண்டிய அவசியமே கிடையாது. யார் என்ன செய்தாலும் பரவாயில்லை என விட்டுவிட்டார்கள். இனியும் அப்படி இருக்க முடியாது. பிராமண சமூகத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர வேண்டும் என ஆவேசமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

அமரன் படம்

ராணுவத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருக்கிறார். இந்தப் படம் தீபாவளி அன்று தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.