Maari Serial : வீட்டுக்கு வரும் கங்காதரன்.. தாராவுக்கு விழுந்த தர்ம அடி, நடந்தது என்ன?
வீட்டுக்கு வரும் கங்காதரன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இங்கு காண்போம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாரி கண் தெரியாதவர் போல மாறு வேடத்தில் இருக்கும் கங்காதரனை காப்பாற்றி வீட்டுக்கு கூப்பிட்டு நான் தேவியம்மா மருமகள் என்ற விஷயத்தை சொல்ல அவரும் வீட்டுக்கு வர சம்மதித்தார்.
இதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வரும் சங்கரபாண்டி வழக்கம் போல சொதப்பிட்டேன், கங்காதரன் நான் போறதுக்குள்ள கிளம்பி போய்ட்டார், அது கூட பிரச்சனை இல்லை மாரி அந்த கங்காதரனை தேடி அங்கு வந்திருந்தா, இது ஏதோ தப்பா படுது என்று தாராவிடம் பேசி கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மாரி கங்காதரனை கூட்டி கொண்டு ஆட்டோவில் வந்து இறங்க தாராவும் சங்கரபாண்டியனும் யாரென தெரியாமல் நின்று பார்க்கின்றனர்.
தாராவை பார்த்த கங்காதரன் கோபப்பட்டு அவளை பளாரென அறைகிறார், கழுத்தை பிடித்து நெறிக்க தாரா நினைவில்லாமல் கீழே சரிந்து விழுகிறாள். பிறகு மாரி ஐயா ஐயா என கூப்பிட்ட பிறகு தான் அது கங்காதரன் கண்ட கனவு என தெரிய வருகிறது. அவரை வீட்டுக்குள் அழைத்து வந்த மாரி இவருக்கு யாரும் இல்ல, எனக்கு தெரிஞ்சவர் தான்.. இனிமே இங்க தான் இருப்பார் என்று சொல்ல தாரா கண்டவங்க வந்து தங்க இது என்ன சாத்திரமா என்று கோபப்பட சூர்யா யாரும் இல்லாதவர்னு சொல்றா அவர் இங்கே இருக்கட்டும் என சொல்லி தாராவை அமைதியாக்குகிறான்.
இதை தொடர்ந்து ஒரு பக்கம் தாராவும் சங்கரபாண்டியும் அவரை பார்க்கும் போது கங்காதரனுக்கு தாடி மீசை வச்சா மாதிரியே இருக்கு என சந்தேகத்தோடு பேச ஸ்ரீஜா, ஜாஸ்மின் உள்ளே வர தாரா அவங்களை வெளியே இருக்க சொல்கிறாள். இதனால் இருவருக்கும் தாரா மீது சந்தேகம் வருகிறது. மறுபக்கம் கங்காதரனை ரூமுக்கு அழைத்து சென்ற மாரி நீங்க இந்த ரூம்ல தங்கிக்கோங்க, நான் கிளீன் பண்ணிடுறேன் என்று சொல்ல அவர் தேவியம்மா பற்றி பெருமையாக பேச சூர்யா இதை கேட்டு சந்தோஷப்படுகிறான். அதோடு அம்மா பற்றியெல்லாம் பேசுறாரு யாராக இருக்கும் என்ற சந்தேகமும் அவனுக்குள் எழுகிறது.
இரவு நேரம் ஆனதும் கீழே இறங்கி வரும் கங்காதரன் தேவி போட்டோ முன்பு நின்று உங்களை கொன்ற தாராவையும் சங்கரபாண்டியையும் நான் பழி வாங்க தான் இங்கே வந்திருக்கேன் என கோபமாக பேசி விளக்கை ஏற்றி வைக்கிறார். இந்த சமயம் மாரி தண்ணீர் குடிக்க கீழே வர கங்காதரன் அதை பார்த்து எதையோ தேடி அலைவது போல நடிக்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்