Maari: மாரி மீது விழும் பழி, முத்துப்பேச்சி கொடுத்த பதிலடி - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maari: மாரி மீது விழும் பழி, முத்துப்பேச்சி கொடுத்த பதிலடி - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Maari: மாரி மீது விழும் பழி, முத்துப்பேச்சி கொடுத்த பதிலடி - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Pandeeswari Gurusamy HT Tamil
May 18, 2023 04:20 PM IST

முத்துபேச்சி துர்காவை வீட்டின் அருகே இறக்கி விட்டு கூடவே அவரும் வர துர்கா நீங்க எதுக்கு வரீங்க என கேட்கிறாள்.

மாரி
மாரி

இந்த சீரியலில் மாரி கோவிலை திறந்ததால் சக்கரையுடன் சேர்ந்து ஜாஸ்மின் சாமியாடியை கொல்ல திட்டம் போட்ட நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, துர்கா முத்துபேச்சியுடன் ஜீப்பில் வந்து கொண்டிருக்க முத்தபேச்சி கையில் இருந்து போட்டோ கீழே விழுகிறது. இதையடுத்து துர்கா அதை எடுத்து யாருடைய போட்டோ என்று பார்த்து கொடுத்து விடுகிறாள். மேலும் முத்துபேச்சி துர்காவை வீட்டின் அருகே இறக்கி விட்டு கூடவே அவரும் வர துர்கா நீங்க எதுக்கு வரீங்க என கேட்கிறாள்.

முத்துப்பேச்சி எனக்கும் உங்க பெரியமம்மாவை பார்க்கணும்னு ஆசையா இருக்கு என சொல்ல நீங்க நினைச்ச உடனே அவங்களை பார்க்க முடியாது, அவங்க இப்போ பூஜையில் இருப்பாங்க. அப்பாய்ன்மெண்ட் வாங்கணும் என சொல்லி உங்க பேர் என்ன என்று கேட்க முத்துபேச்சி தனது பெயர் முத்து என்று சொல்கிறார்.

பிறகு உள்ளே சென்று மாரியை சந்தித்து ஒரு ஏமாளி வந்தாங்க, அவங்களோட வந்துட்டேன் என துர்கா பேசி கொண்டிருக்க அங்கு முத்துப்பேச்சி போட்டோ இருக்க துர்கா இது யார் என கேட்க மாரி இவங்க தான் முத்துபேச்சி என்று சொல்கிறாள். உடனே அங்கு வரும் முத்துப்பேச்சி அந்த ஏமாளி நான் தான் சொல்ல துர்கா மாரி பின்னாடி ஒளிந்து கொள்கிறாள்.

பிறகு முத்துப்பேச்சி நீ என்னை பெரியம்மானே கூப்பிடு என சொல்லி முத்தம் கொடுக்க துர்கா உடனே அதை துடைத்து எனக்கு யார்னா முத்தம் கொடுத்தா பிடிக்காது உடனே துடைச்சிடுவேன் என்று சொல்ல ராசாத்தி பழக்கமும் இது தான் என்பது ஞாபகத்துக்கு வருகிறது.

அதன் பிறகு முத்துப்பேச்சி துர்கா காலில் கொலுசு இல்லாமல் இருப்பதை பார்த்து ராசாத்தி குழந்தையாக இருக்கும் போது போட்ட தங்க கொலுசை எடுத்து போட்டு விடுகிறாள். மறுபக்கம் சாமியாடி வீட்டுக்கு ஒருவர் வந்து ஊர் தலைவர் அழைத்ததாக சொல்லி கூட்டி போக அங்கே சங்கரபாண்டி ஊர் தலைவர் ஆகியோர் ஒன்று சேர்ந்து மதுபானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து சாமியாடியை குடிக்க வைக்கின்றனர்.

சாமியாடி வீட்டில் அவர் வரவில்லை என பதற்றமாக இருக்க இந்த விசியம் முத்துப்பேச்சிக்கும் தெரிய வந்து அவர் சாமியாடி வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்லி கொண்டிருக்க அப்போது வரும் ஒருவன் கோவில் குளத்தின் அருகே சாமியாடி செத்து கிடப்பதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதனைத்தொடர்ந்து எல்லாரும் குளத்தின் அருகே கூட சக்கரை மாரி செய்த வேலையால் அம்மன் கோபப்பட்டு சாமியாடி உயிரை காவு வாங்கி விட்டதாக சொல்ல முத்துப்பேச்சி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ஊர் தலைவர் இதுக்கெல்லாம் காரணம் மாரி தான், அவங்க ஊர்ல அவளை அபச குணம்

பிடிச்சவனு தள்ளி தான் வைத்திருந்தாங்க, அவ இந்த ஊர்ல இருந்தா கோவில் திருவிழா நடக்காது என சொல்கிறார்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை அறிந்து கொள்ள மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.