Lokesh Kanagaraj: 'லியோ 2ம் பாதி மோசம்' உண்மையை ஒப்புக் கொண்ட லோகேஷ்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ படம் தொடர்பான விமர்சனம் குறித்து பதிலளித்து உள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று ( அக். 28) கார்த்தி நடித்து இருக்கும், 25 ஆவது படமான ஜபான் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் லியோ படம் தொடர்பான கேள்விகளை முன் வைத்தனர்.
இது குறித்து அவர் கூறுகையில், “மக்களுக்கு லியோ படம் பிடித்து இருக்கிறது. திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பார்த்தோம். ஆனால் லியோ படத்தின் இரண்டாம் பாதியில் சற்று தொய்வு இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனது வேலை அதோடு முடிந்தது. திரைப்படத்தின் வசூலுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. அதைப் பற்றி தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும். அவரே சொல்லுவார்" என்றார்.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம், பெரும்பான்மையான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிரார்.
விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பு இல்லை. 2021 பிளாக் பஸ்டர் மாஸ்டருக்குப் பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைவதை லியோ குறிக்கிறது.
முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் லியோ படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. திரையரங்குகளுக்குப் பிறகு திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்வதற்கான உரிமையை மேடை பெற்றது.
நவம்பர் 4 ஆவது வாரத்தில் லியோ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்