தீபாவளி தல தீபாவளி! தலை தீபாவளி கொண்டாடும் நட்சத்திரங்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தீபாவளி தல தீபாவளி! தலை தீபாவளி கொண்டாடும் நட்சத்திரங்கள்!

தீபாவளி தல தீபாவளி! தலை தீபாவளி கொண்டாடும் நட்சத்திரங்கள்!

Suguna Devi P HT Tamil
Published Oct 31, 2024 08:28 AM IST

இந்தியாவில் பிரதானமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை இருந்து வருகிறது. இது இந்து மத அடிப்படையில் பல புராண கதைகளின் காரணமாக கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.

தீபாவளி தல தீபாவளி! தலை தீபாவளி கொண்டாடும் நட்சத்திரங்கள்!
தீபாவளி தல தீபாவளி! தலை தீபாவளி கொண்டாடும் நட்சத்திரங்கள்!

ஐஸ்வர்யா- உமாபதி

நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுனிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவிற்கும் கடந்த ஜூன் 10 அன்று திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இந்த திருமணம் நடைபெற்றது. இந்த ஆண்டு இந்த தம்பதியினர் தலை தீபாவளி கொண்டாட உள்ளனர். 

பிரேம்ஜி அமரன் - இந்து

நீண்டகாலமாக தன்னை பேச்சிலர் என்று சொல்லி சுற்றி திரிந்து கொண்டிருந்த நடிகர் மற்றும் பாடகர் பிரேம்ஜி மற்றும் இந்துவிற்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருத்தணி முருகன் கோவிலில் வைத்து குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் மத்தியில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினர் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடுகின்றனர்.

வரலட்சுமி - நிக்கோலய் சச்தேவ்

நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த ஜூலை 3 அன்று  மும்பையைச் சேர்ந்த  நிக்கோலய் சச்தேவ் என்பவரை தாய்லாந்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் பெற்றவர்கள் சம்மதத்துடன் தமிழ் முறைபபடி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடுகின்றனர்.

மேகா ஆகாஷ் -சாய் விஷ்ணு 

நடிகை மேகா ஆகாஷ் அவரது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணு என்பவரை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ஆவணி திருவோணத்தில் திருமணம் செய்து கொண்டார். சாய் விஷ்ணு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் மகனாவார். இந்த தம்பதியினர் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடுகின்றனர்.

காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காளிங்கராயர்

நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் அவரது காதலி கோவையை சேர்ந்த தாரணி காளிங்கராயருக்கும் இந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினரும் தங்களது தலை தீபாவளியை தமிழகத்தின் மாநகரான கோவையில் கொண்டாடுகிறார்கள்.

நடிகை பூஜா கண்ணன்- வினீத்

நடிகை சாய்பல்லவியின் சகோதரியும் நடிகையுமான பூஜா கண்ணன் அவரது காதலர் வீனீத்திறக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. படுகா பாராம்பரியப் படி நடந்த இந்த திருமணத்தில் இரு வீட்டாரும் கலந்து கொண்டனர். இந்த தம்பதியினர் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடுகின்றனர்.

பல சின்னத்திரை பிரபலங்களும் இன்று தலை தீபாவளியை கொண்டாடுகின்றனர். தலை தீபாவளி கொண்டாடும் அனைத்து புதுமண தம்பதியினருக்கும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக தலை தீபாவளி நல்வாழ்த்துகள்.