Bigg Boss Tamil 6: பிக் பாஸ் சென்ற பெண் போட்டியாளர்கள் யார் யார் ?
பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று இருக்கும் பெண் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 6 ஆவது சீசன் இன்று மாலை தொடங்குகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி செல்லும் போட்டியாளர்கள் மக்களின் ஆதரவோடு 100 நாட்கள் அந்த வீட்டில் இருக்க வேண்டும். அங்கு இருப்பது மட்டுமில்லாமல் மக்கள் மனதையும் வெல்பவர்களே பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை தட்டிச் செல்வார்கள்.
பிக்பாஸ் சீசன் 6 ஸின் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
நேற்று நடந்த சூட்டிங்கின்படி, இதுவரை 13 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 6 வீட்டிற்குள் சென்று உள்ளனர்.
இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள், திருநங்கை ஒருவர் என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் இதில் கலந்து கொள்ளும் பெண் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அவர்கள் யார் என்பதை கீழே பார்க்கலாம்,
ரக்ஷிதா
மைனா நந்தினி
மெட்டி ஒலி சாந்தி
மாடல் அழகி ஆயிஷா
ஷிவின் கணேசன் என்கிற திருநங்கை,
மாடல் அழகி ஷெரீனா
இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி
மகேஷ்வரி வி.ஜே
டாபிக்ஸ்