Leo Success Meet: ‘நல்லவேளை என்னை கொல்லவில்லை..’ த்ரிஷாவின் குசும்பு பேச்சு!
சினிமா துறையில் தான் அதிக வருடங்களாக நட்பில் இருக்கும் நபர் விஜய் தான் என த்ரிஷா கூறினார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெற்றியை தொடர்ந்து அதற்கான சக்சஸ் மீட், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமோகமாக நடைபெற்று வருகிறது.
வெற்றி சந்திப்பில் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உட்பட “லியோ” படத்தின் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.
நடிகை த்ரிஷா பேசுகையில், “ எல்லோருக்கும் முதலில் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இதற்கு ரசிகர்கள் தான் காரணம். லியோ ஒரு சுற்றுலா போல இருந்தது.
ஒரு ஸ்கூலில் படித்த நண்பனை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் எனக்கு விஜய்யை பார்க்கும் போது இதில் இருந்தது. சினிமா துறையில் நான் அதிக வருடங்களாக நட்பில் இருக்கும் நபர் விஜய் தான். விஜய்யிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே இருக்கிறார்.
அமைதியும், வெற்றியும் தான் சரியான பதிலடியாக இருக்கும் என்று சொல்வார்கள். அது லியோவிற்கு நடந்து இருக்கிறது.
நான் பல வெற்றி இயக்குநர்கள் உடன் வேலை பார்த்து இருக்கிறேன். அதில் சிலர் மட்டும் தான் அவர்கள் அவர்களாவே இருப்பர். அதில் ஒருவராக லோகேஷ் இருக்கிறார்.
அவர் என்னிடம் சில வருடங்களுக்கு முன்னர் இந்த கதையை சொன்னார். அவர் சொன்ன படியே எடுத்தார். எந்த மாற்றமும் செய்யவில்லை. நல்ல வேளை அவர் என்னை படத்தில் கொல்லவில்லை. அவரிடம் அப்படி போடு போல ஒரு பாட்டு கேட்டேன் “ என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்