Leo box office collection: நங்கூரமாய் நிற்கும் ரஜினி; முட்டி மோதும் விஜய் - லியோ வசூல் எவ்வளவு தெரியுமா?
லியோ திரைப்படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில், கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான திரைப்படம் லியொ. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்தத்திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் படத்தின் வசூலானது விஜயின் கடந்த திரைப்படமான வாரிசை விட நன்றாகவே இருந்தது.
இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை லியோ திரைப்படம் 2.15 கோடி மட்டுமே வசூல் செய்த நிலையில், சனிக்கிழமையான நேற்றைய தினம் லியோ திரைப்படம் 4 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் சொல்லுகின்றன. இதனை சேர்த்து பார்க்கும் போது லியோ திரைப்படம் இந்தியாவில் மட்டும் இது வரை 323 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரிகிறது.
நேற்றைய தினம் மட்டும் லியோ திரைப்படத்தை தமிழில் பார்த்த பார்வையாளர்களின் சதவீதம் 29.22 சதவீதமாக இருந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம் லியோ திரைப்படம் தோராயமாக 4.15 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இந்தியாவில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் வசூலை முறியடித்த லியோ திரைப்படம், ஜெயிலர் வசூலை முறியடிக்கும் நோக்கத்தில் இருக்கிறது. ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் இந்தியாவில் 348.55 கோடி ரூபாயும், உலகளவில் 604 கோடி ரூபாயும் வசூலித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. உலகளவில் பார்க்கும் போது லியோ திரைப்படம் 578 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் நிலையில், தமிழ் நாட்டில் மட்டும் லியோ திரைப்படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறதாம். இதன் மூலம் ஜெயிலர், பொன்னியின் செல்வன் பாகம் 1 -ற்கு பிறகு 200 கோடி வசூல் செய்த 3 வது படமாக மாறியிருக்கிறது லியோ. குறிப்பாக கேரளாவில் இந்த திரைப்படம் 58 கோடி வரை வசூல் செய்திருக்கிறதாம். இது அங்கு ஜெயிலர் திரைப்படம் வசூலித்த தொகையை விட அதிமாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்