சானிட்டரி நாப்கின் விளம்பரத்தில் நடிக்க மறுக்கும் லாரா தத்தா
நடிகை லாரா தத்தா தான் சானிட்டரி நாப்கின் விளம்பரத்தில் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவர் லாரா தத்தா. அதில் கிடைத்த புகழ் மூலம் திரை உலகிற்குள் நுழைந்து நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். 2003 ஆம் ஆண்டு ’அண்டாஸ்’ படத்தில் நடித்த இவர் 'மஸ்தி', 'நோ என்ட்ரி', 'பார்ட்னர்' 'டான் 2' என அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்தார்.
இவர் தமிழில் 2004 ஆம் ஆண்டு வெளியான அரசாட்சி படத்தில் அர்ஜுனுடன் இணைந்து நடித்திருந்தார். கடைசியாக லாரா, கடந்த ஆண்டு, அக்ஷய் குமார் மற்றும் ஹூமா குரேஷியுடன் நடிப்பில் வெளியான 'பெல் பாட்டம்' படத்தில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போல் வேடமணிந்து நடித்திருந்தார். லாரா தத்தா படங்கள் மட்டுமின்றி வெப் சிரீஸ், விளம்பரம் உள்ளிட்டவற்றிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் லாரா தத்தாவிடம் ஆங்கில ஊடகம் ஓன்றிருக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், "சானிட்டரி நாப்கின்கள், மதுபானங்கள் மற்றும் சிகரெட் உள்ளிட்ட விளம்பரங்களில் நடிப்பீர்களா?" என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லாரா, "ஒரு பொருளைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், அதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன்" என்றார்.