Tamil News  /  Entertainment  /  Lal Salaam Release Rajinikanth Fans Gice Free Food In Chennai Theatre

Lal Salaam Release: லால் சலாம் ரிலீஸ்.. இலவசமாக உணவு வழங்கி கொண்டாடும் ரஜினிகாந்த் ரசிகர்கள்!

Aarthi Balaji HT Tamil
Feb 09, 2024 09:21 AM IST

ரஜினிகாந்த் ரசிகர்கள் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோஹினி திரையரங்கில் இருந்தவர்களுக்கு இலவச உணவு வழங்கினர்.

லால் சலாம்!
லால் சலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு விளையாட்டுப் படம் என சொல்லப்படுகிறது.

இப்படத்தில் ’மொய்தீன் பாய்’ என்னும் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா மற்றும் தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக இயக்குகிறார். இப்படத்தை விஷ்ணு ரங்கசாமி எழுதியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று (பிப்ரவரி 9 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது. லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார்.

இந்நிலையில் லால் சலாம் படம் இன்று ( பிப். 9) வெளியாகி இருக்கும் நிலையில் ரஜினி ரசிகர்கள் படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக ரஜினிகாந்த் ரசிகர்கள் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோஹினி திரையரங்கில் இலவசமாக உணவு வழங்கி உள்ளனர். ரஜினிகாந்த் ரசிகர்களின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

முன்னதாக விழா மேடையில் பேசிய லால் சலாம் படத்தின் இயக்குநரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ”அப்பாவை சங்கின்னு சொல்லும்போது கோபம் வரும். இப்போது சொல்கிறேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால் அவர் லால் சலாம் படத்தில் நடித்து இருக்கமாட்டார். அவர் மனிதநேயவாதி.

இந்தப் படத்தில் அவ்வளவு தைரியமாக யாருமே நடித்து இருக்கமாட்டார்கள், அவரைத் தவிர. நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ரஜினி ரசிகனாக இந்தப் படம் உங்களை பெருமைப்பட வைக்கும்’ எனப் பேசி இருந்தார்.

தமிழகத்தில் லால் சலாம் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்து உள்ளார். தனுஷ் நடித்த ‘3', கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ போன்ற படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.