Top 10 Cinema: 25 கோடி தங்கலான்.. 150 கோடி ராயன்; தனுசை தாக்கிய சிவா;வெளுத்து விட்ட மிஷ்கின்!- டாப் 10 சினிமா செய்திகள்!-kottukkaali trailer mysskin speech and more tamil cinema top 10 kollywood news today august 13 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema: 25 கோடி தங்கலான்.. 150 கோடி ராயன்; தனுசை தாக்கிய சிவா;வெளுத்து விட்ட மிஷ்கின்!- டாப் 10 சினிமா செய்திகள்!

Top 10 Cinema: 25 கோடி தங்கலான்.. 150 கோடி ராயன்; தனுசை தாக்கிய சிவா;வெளுத்து விட்ட மிஷ்கின்!- டாப் 10 சினிமா செய்திகள்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 13, 2024 07:40 PM IST

Top 10 Cinema: சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது என சொல்லப்படுகிறது. - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!

Top 10 Cinema: 25 கோடி தங்கலான்.. 150 கோடி ராயன்; தனுசை தாக்கிய சிவா;வெளுத்து விட்ட மிஷ்கின்!- டாப் 10 சினிமா செய்திகள்!
Top 10 Cinema: 25 கோடி தங்கலான்.. 150 கோடி ராயன்; தனுசை தாக்கிய சிவா;வெளுத்து விட்ட மிஷ்கின்!- டாப் 10 சினிமா செய்திகள்!

தனுசை தாக்கிய சிவகார்த்திகேயன்? 

2. கூழாங்கல் புகழ் வினோத் ராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது நான் யாரையும் கண்டுபிடித்து நான்தான் இவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன். இவர்களை நான் தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கி விட்டார்கள். ஆனால் நான் அந்த மாதிரியான ஆள் கிடையாது. அவர் தனுசைதான் தாக்கிப் பேசியதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

3.கொட்டுக்காளி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின் நான் தற்போது இரண்டு படங்களை பார்த்திருக்கிறேன். ஒன்று மாரிசெல்வராஜ் இயக்கிய வாழை. அந்தப்படத்தை பார்த்த போது, கிட்டத்தட்ட ஒரு வாரம் எனக்கு தூக்கமே இல்லை. பைத்தியம் பிடித்தது போல இருந்தேன். கொட்டுக்காளி படத்தை பார்த்த பின்னர், எனக்கு கிட்டத்தட்ட பேயே பிடித்து விட்டது என்று பேசினார்.

24 மணிநேரத்தில்  2 கோடி பார்வையாளர்கள்

4. இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. வெளியான 24 மணிநேரத்தில் இந்த ட்ரெய்லர் 2 கோடி பார்வையாளர்களை தாண்டி சென்றடைந்து இருக்கிறது.

5.சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது என சொல்லப்படுகிறது.

6. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து, தனுஷுடன் எந்த தயாரிப்பாளர்கள் பயணித்தாலும், தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தோசித்து விட்டே, படம் தயாரிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியான நிலையில், அதனை நடிகர் சங்கம் கடுமையாக எதிர்த்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோர் தனுஷை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

7.பிரபல நடிகையான நயன்தாரா தன்னுடைய குழந்தைகள் உடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

8. நடிகர் தனுஷ் இயக்கி நடித்து கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ராயன். இப்படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதல் நாளில் இருந்தே இந்தப்படம் அமோக வரவேற்பை பெற்று வந்தது. உலகளவில் இப்படம் 7 நாட்களில் ரூ. 100 கோடி மேல் வசூல் செய்து தனுஷின் கேரியரில் குறுகிய நாட்களில் ரூ. 100 கோடியை தோட்ட திரைப்படம் என்கிற என்ற பெருமையை பெற்ற நிலையில் தற்போது இந்தப்படம், 150 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

9. இயக்குநர் மணி ரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தக் லைஃப். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து கமலின் 65 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிடபட்டு இருக்கிறது.

10. கூழாங்கல் புகழ் வினோத் ராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.