திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்

திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்

Aarth V HT Tamil
Feb 17, 2022 12:25 PM IST

எக்ஸ்பிரஷன் குயின் நஸ்ரியா மற்றும் ஃபகத் பாசில் 12 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

<p>காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர், நடிகைகள்</p>
<p>காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர், நடிகைகள்</p>

சூர்யா, ஜோதிகா இணைந்து ஒன்றாக பல படங்களில் நடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக 'காக்க காக்க', 'சில்லுனு ஒரு காதல்' ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவர்கள் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அனைவரின் விருப்பமான ஜோடிகளாக இருக்கும் இவர்களுக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சினேகா- பிரசன்னா

2009 ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தவர்கள் சினேகா, பிரசன்னா ஜோடி. அதன் பின்பு காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

அஜித் - ஷாலினி

நடிகர் அஜித், ஷாலினி அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தனர். படத்தின் படப்பிடிப்பிலேயே அஜித் தனது காதலை ஷாலினியிடம் கூறினார். பின்பு இருவரும் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். 

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார் ஷாலினி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மேலும் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கும் அஜித் மீதமுள்ள நேரங்களை குடும்பத்துடன் செலவு செய்து வருகிறார்.

அட்லீ - ப்ரியா

பத்து வருடமாக நண்பர்களாகப் பழகி வந்த அட்லீ மற்றும் ப்ரியா 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்த ப்ரியா அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்லீயுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

பாக்கியஜாஜ்- பூர்ணிமா

டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தில் இயக்குநர் பாக்கியராஜூக்கு அறிமுகமானவர் பூர்ணிமா. அதற்கு பிறகு நண்பர்களாகப் பழகி வந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக பாக்கியராஜூக்கு முதல் மனைவி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சுந்தர்.சி- குஷ்பு

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாமன் படத்தில் குஷ்பு நடித்தார். அப்போது இருவரும் காதலில் விழுந்து, 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

ராதிகா- சரத்குமார்

கிழக்கே போகும் ரயில் படம் மூலம் அறிமுகமானவர் ராதிகா. 80களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த இவருக்கும், சரத்குமாருக்கும் 2001 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் இவர்கள் தங்கள் 21 ஆவது திருமண நாளை விமர்சையாக கொண்டாடினர்.

நஸ்ரியா- ஃபகத் பாசில்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் நஸ்ரியா. செல்லமாக இவரை எக்ஸ்பிரஷன் குயின் எனவும் ரசிகர்களால் அன்போடு அழைக்கின்றனர். 

இவரும் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசிலும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். நஸ்ரியாவுக்கும், பகத் பாசிலுக்கும் 12 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா- சாயிஷா

ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து 2019 ஆம் ஆண்டு வெளியான கஜினிகாந்த் படத்தில் நடித்தனர். பின்பு காதலில் விழுந்த இவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்பு இணைந்து டெடி படத்தில் நடித்தனர். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.

அமலா - நாகார்ஜுனா

'சினாபாபு', 'சிவா', 'பிரேம யுத்தம்' மற்றும் 'நிர்ணயம்' ஆகிய தெலுங்கு படங்களில் ஒன்றாக நடித்தவர்கள் அமலா - நாகார்ஜுனா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Whats_app_banner

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.