Kiran Rao: ‘அத்தனை முறை கருச்சிதைவு… உடம்புல அவ்வளவு பிரச்சினை’ வாடகைத்தாய் ஏன்? - அமீர்கான் மனைவி பகீர்!-kiran rao had multiple miscarriages before welcoming son azad with aamir khan - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kiran Rao: ‘அத்தனை முறை கருச்சிதைவு… உடம்புல அவ்வளவு பிரச்சினை’ வாடகைத்தாய் ஏன்? - அமீர்கான் மனைவி பகீர்!

Kiran Rao: ‘அத்தனை முறை கருச்சிதைவு… உடம்புல அவ்வளவு பிரச்சினை’ வாடகைத்தாய் ஏன்? - அமீர்கான் மனைவி பகீர்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 19, 2024 07:22 PM IST

உடல்ரீதியாகவும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டேன். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், நான் ஒரு குழந்தையை பெறுவதற்கு, மிகவும் ஆர்வமாக இருந்தேன். என்னுடைய மகன் பிறந்த போது, என்னால் முடிவு எடுக்க முடியவில்லை.

Aamir Khan and Kiran Rao are divorced now and co-parent their son Azad. (File Photo)
Aamir Khan and Kiran Rao are divorced now and co-parent their son Azad. (File Photo)

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். விவாகரத்து செய்து கொண்ட போதும், தங்களது குழந்தைக்கு நல்ல பெற்றோராகவும், நண்பர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் முதன்முறையாக இயக்குநராக மாறி இருக்கும் திரைப்படம் லாபதா லேடீஸ். மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. இந்த நிலையில் ஜூம் இணையதளத்திற்கு பேட்டி கொடுத்த கிரண், தன்னுடைய கருச்சிதைவு குறித்து பேசி இருக்கிறார். 

இது குறித்து அவர் பேசும் போது, “ நான் கிட்டத்தட்ட 5 வருடங்களாக, ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தேன். எனக்கு பலமுறை கருச்சிதைவு நடந்தன. 

உடல்ரீதியாகவும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டேன். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், நான் ஒரு குழந்தையை பெறுவதற்கு, மிகவும் ஆர்வமாக இருந்தேன். என்னுடைய மகன் பிறந்த போது, என்னால் முடிவு எடுக்க முடியவில்லை. 

ஆனால், நான் என்னுடைய குழந்தையை வளர்க்க வேண்டும் என்று மட்டும் நினைத்தேன். மகன் ஆசாத்தை நான் மிகவும் கொண்டாடினேன். அது என்னுடைய வாழ்க்கையின் சிறந்த வருடங்களாக இருந்தன. அந்த வருடங்களில் நான் படங்கள் செய்யவில்லை என்று வருத்தப்படவில்லை. காரணம், நான் அவ்வளவு சந்தோஷமாக இருந்தேன்.

முன்னதாக, வாடைத்தாய் முறை குறித்து இந்தியா டுடே இணையதளத்திற்கு பேசிய கிரண், “ இது தனிப்பட்ட விவகாரம். ஒருவரால் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை அல்லது அவர் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள அந்த வழிமுறையை தேர்ந்தெடுத்தார் தொடர்பான விஷயங்கள் மக்கள் விரும்பும் விஷயங்கள் அல்ல. 

ஆனால் நாங்கள் பொதுமக்கள் பார்வையில் இருப்பதால், அதைப்பற்றி எங்களிடம் கேட்கப்படும் என்று எங்களுக்குத் தெரியும். எங்கள் முடிவை நாங்கள் பாதுகாக்க விரும்ப வில்லை. அதனால் நாங்கள் வெளிப்படையாக வெளியில் சொன்னோம். இந்த விஷயம் மக்களுக்கு தெரிந்து, பயன் தந்தால் அது நல்லதுதானே” என்று பேசினார்.

முன்னதாக விவாகரத்து குறித்து இருவரும் மனம் திறந்து பேசினர். அந்த பேட்டி இங்கே!

அந்த நிகழ்ச்சியில் பேசிய அமீர்கான், “ நான் உங்களுக்கு ஒரு வேடிக்கையான விஷயத்தை சொல்கிறேன். நாங்கள் அண்மையில் விவாகரத்து செய்து கொண்டது எல்லோருக்கும் தெரியும்.

ஒரு மாலை நேரத்தில் நான் இதனை கிரணிடம் கேட்டேன். அவரிடம் நான், ஒரு கணவனாக நான் எந்த விதத்தில் உனக்கு குறை உள்ளவனாக இருந்தேன். நல்ல கணவனாக மாற நான் என்னென்ன விஷயங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டேன்.” என்றார்.

இதனையடுத்து கிரண் ஒரு பட்டியலுடன் தயாராக இருந்தாள். நான் என்னுடைய குறைகளை பாய்ண்டுகளாக மாற்ற வைக்கப்பட்டேன்.

தொடர்ந்து கிரண், “ நீ அதிகமாக பேசுகிறாய். நீ மற்றவர்களை பேசவே விடமாட்டாய். உன்னுடைய கருத்தையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பாய்” என்றார். நான் அதற்கு 15 முதல் 20 பாய்ண்டுகளை கொடுத்தேன்.” என்று பேசினார்.

இதற்கு சோசியல் மீடியாவில் சிலர் எதிர்வினையாற்றி இருந்தனர். அதில் ஒருவர் இவ்வளவு முதிர்ச்சி தேவையில்லை என்று கமெண்ட் செய்திருந்தார். இன்னொருவர் அமீர்கான் எவ்வளவு முதிர்ச்சியாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறார்.” என்று கமெண்ட் செய்திருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.