இது தான் என்னுடைய கடைசி பிக்பாஸ்! அறிவிப்பை வெளியிட்ட நடிகர்!
பத்து சீசன்களுக்கும் மேலாக கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த சுதீப் தற்போது இது தான் தனது கடைசி சீசன் எனத் தெரிவித்துள்ளார். இது கன்னட பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கிய கன்னட பிக்பாஸ் தொடங்கியது. தற்போது இதன் 11 ஆவது சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த 11 சீசன்களையும் கன்னட நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். பத்து சீசன்களுக்கும் மேலாக கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த சுதீப் தற்போது இது தான் தனது கடைசி சீசன் எனத் தெரிவித்துள்ளார். இது கன்னட பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை சீசன்களாக பிக்பாஸ் கன்னடத்தின் முகமான கிச்சா சுதீப் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுகிறார். பிக் பாஸ் கன்னடத்தின் முதல் சீசன் 2013 இல் ஒளிபரப்பு செய்யப்பட்டதிலிருந்து சுதீப் தொகுப்பாளராக இருந்து வருகிறார். 2021 இல் பிக் பாஸ் கன்னட மினி சீசன் மற்றும் 2022 இல் பிக் பாஸ் கன்னட OTT ஆகியவற்றின் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
X தள பதிவு
இது குறித்த அவரது X தளத்தில், “இத்தனை ஆண்டுகளாக கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்த அணைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சி மீதும் என் மீதம் எந்தளவுக்குக் காதல் வைத்திருக்கிறீர்கள் என்பதை இந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பி சொல்கிறது. உங்களுடன் 11 ஆண்டுகள் ஒன்றாகப் பயணித்தது சிறப்பான விஷயம். தற்போது இது எனக்கான நேரம். இதிலிருந்து விலகி தற்போது எனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதில் கவனம் செலுத்தவிருக்கிறேன்.
கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கும் கடைசி சீசன் இதுதான். என்னுடைய இந்த முடிவுக்கு சேனலும், பிக் பாஸ் ரசிகர்களும் மரியாதை கொடுப்பார்கள் எனத் தீர்க்கமாக நம்புகிறேன். இந்த சீசனை சிறப்பாக நடத்தி முடிப்போம். தொடர்ந்து வேறு வழிகளில் நான் நிச்சயமாக உங்களை என்டர்டெயின் செய்வேன்." எனக் பதிவிட்டிருக்கிறார்.
தமிழைத் தொடர்ந்து கன்னட பிக்பாஸ் நிகச்சியிலும் தொகுப்பாளர் விலகியுள்ளது பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் கன்னட பிக்பாஸ் சீசன் 11 இல் ஒரு சர்ச்சைக்குரிய டாஸ்க்கின் போது பெண் போட்டியாளர்களின் தனியுரிமை மீறல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து கர்நாடகா கும்பல்கோடு காவல்துறை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நோட்டீஸ் அனுப்பியதையடுத்து விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்திய எபிசோடில் ஒளிபரப்பப்பட்ட டாஸ்க், சிறையில் நடத்தப்படுவது போன்று போட்டியாளர்களை நடத்துவது குறித்து கர்நாடக மாநில மகளிர் ஆணையம் கேள்விகளை எழுப்பியது. தொடரும் விசாரணையை அடுத்து, கன்னட பிக்பாஸின் திருத்தப்படாத காட்சிகளை வழங்குமாறு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது போன்ற வழக்கு காரணமாக கிச்சா சுதீப் விலகுகிறாரா எனவும் கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் சுதீப் தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி உள்ள காரணத்தால் இந்த முடிவு எடுத்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இயக்குனர் அனுப் பண்டாரியின் பில்லா ரங்கா பாஷா படத்தில் சுதீப் நடிக்க உள்ளார். படத்தின் கான்செப்ட் வீடியோ கடந்த மாதம் சுதீப்பின் 51வது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. பில்லா ரங்கா பாஷா அனைத்து முக்கிய மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது, இருப்பினும் படத்தின் கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேக்ஸ் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.
டாபிக்ஸ்