Khushbu: என் இதயம் பிரபுவுக்காக துடிக்கும் - குஷ்பு நெகிழ்ச்சி
Chinna Thambi Completes 32 Years: சின்ன தம்பி படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.
1991ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி பி. வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியான படம், சின்ன தம்பி. இதில் மனோரமா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
குஷ்பு திரைப்பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமைந்த சின்னதம்பி வசூலிலும் பட்டையைக் கிளப்பியது. 250 நாள்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. தமிழ்நாடு மாநில விருதுகள் உள்பட அன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு விருதுகளை வென்றது. தமிழை தொடர்ந்து தெலுங்கில் சந்தி என்ற பெயரிலும் கன்னடத்தில் ராமாச்சாரி என்றும் இந்தியில் ஆனாரி என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் சின்ன தம்பி படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதனை நினைவு கூறும் விதமாக குஷ்பு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "சின்னதம்பி தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி 32 வருடங்கள் ஆகிறது என்பதை நம்பவே முடியவில்லை. என் மீது பொழிந்த அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருப்பேன். பி.வாசு & பிரபு ஆகியோருக்காக என் இதயம் எப்போதும் துடிக்கும்.
நந்தினி எப்போதுமே அனைவரின் இதயங்களிலும், மனங்களிலும் என்னென்றும் நிறைந்து இருப்பார்” எனக் குறிப்பிட்டு உள்ளார். குஷ்புவின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.