Kayal Serial: விதவைய மணமேடைக்கா? ஸ்கெட்ச் போட்ட சங்கரி; உச்சக்கட்ட கோபத்தில் கயல்! - கயல் சீரியலில் இன்று!
Kayal Serial: கடுப்பான கயல், அது போன்ற மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று சொல்லி, காமாட்சியை மணமேடைக்கு அருகே அழைத்து வந்தாள். இதைப்பார்த்த சிவசங்கரி கோபமானாள். -
Kayal Serial: விதவைய மணமேடைக்கா? ஸ்கெட்ச் போட்ட சங்கரி; உச்சக்கட்ட கோபத்தில் கயல்! - கயல் சீரியலில் இன்று!
கயல் சீரியலில் இருந்து இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில், கயல் குடும்பத்தை, சிவசங்கரி குடும்பம் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்த நிலையில், இறுதியாக காமாட்சி விதவை என்பதை குறிப்பிடும் வகையில், சில விஷயங்கள் நடந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கடுப்பான கயல், அது போன்ற மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று சொல்லி, காமாட்சியை மணமேடைக்கு அருகே அழைத்து வந்தாள். இதைப்பார்த்த சிவசங்கரி கோபமானாள்.
கயல் சீரியலில் நேற்று நடந்தது என்ன?
கயல் சீரியலின் கடந்த எபிசோடில், வடிவும் தர்மலிங்கமும் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று முயற்சிகளை செய்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சிவசங்கரியின் அண்ணன் லண்டனிலிருந்து வந்தார். அவரிடம் கல்யாணப் பெண் தீபிகாதான் என்று சிவசங்கரி சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைந்து நின்றனர்.
