Kayal Serial: கயலுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து.. எச்சரித்த கடை ஊழியர் - கயல் சீரியல்-kayal serial today promo episode on august 30 indicates kayal in trouble - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: கயலுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து.. எச்சரித்த கடை ஊழியர் - கயல் சீரியல்

Kayal Serial: கயலுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து.. எச்சரித்த கடை ஊழியர் - கயல் சீரியல்

Aarthi Balaji HT Tamil
Aug 30, 2024 12:19 PM IST

Kayal Serial: புடவை எடுக்கப் போன இடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் திருமணத்திற்கு மெஹந்தி போட வந்திருக்கிறேன் என்று தீபிகா கயல் வீட்டிற்குள் நுழைந்தார்.

Kayal Serial: கயலுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து.. எச்சரித்த கடை ஊழியர் - கயல் சீரியல்
Kayal Serial: கயலுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து.. எச்சரித்த கடை ஊழியர் - கயல் சீரியல்

கயலுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து

கயல் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 30 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், “ புடவை எடுக்கப் போன இடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் திருமணத்திற்கு மெஹந்தி போட வந்திருக்கிறேன் என்று தீபிகா கயல் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் ஏதோ ஒரு முடிவோட தான் வீட்டிற்குள் வந்து இருக்கிறாள். அவளின் எண்ணம் ஒருபோதும் நடக்கப் போவதில்லை. தீபிகா முன்பு என் காயலை கரம் பிடித்துக் காட்டுகிறேன் ” என்று கயல் பேசுவது போல் ப்ரோமோ முடிந்தது.

இரண்டாவது ப்ரோமோவில், கடையில் வேலை பார்க்கும் அனைவருக்கும் கயல் எழில் மற்றும் அவரது மாமியார் இணைந்து திருமண பத்திரிகை வைத்து வருகின்றனர்.

கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க

 அப்போது கயிலை அசிங்கப்படுத்த வேண்டும் என அறையில் கேமரா வைக்கும் நபருக்கு பத்திரிக்கை வைத்தார். பத்திரிகை வாங்கிக் கொண்ட அவர் உங்கள் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் ஆனால் எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் என சொல்லி எச்சரிக்கை விடுத்தார்.

மறுபக்கம் தன் தங்கை திருமணத்தை தடல்புடலாக செய்ய வேண்டும் என நினைத்து மூர்த்தி ஏகப்பட்ட விஷயங்களை செய்து வந்தார். இதை பார்த்த கயல் உனக்கு இவ்வளவு செலவு செய்ய பணம் எங்கிருந்து வந்தது என தன் அண்ணனிடம் கேட்டார். பயனிடம் எப்படி உண்மையை சொல்வது என்று மூர்த்தி முழிப்பதுடன் இன்றைய எபிசோடு காண ப்ரோமோ முடிந்தது.

நேற்றைய எபிசோட்

நேற்றைய எபிசோட்டில் வேதவள்ளி, ஸ்ரீதேவியை தன்னுடைய மகள் போல இனி பார்த்துக் கொள்வேன் என்று சொல்ல, தர்மலிங்கமும் வடிவும், இவளுக்கு திடீரென்று என்ன ஆயிற்று, இவள் நல்லவள் போல் நடிக்கிறாளா இல்லை, உண்மையாகவே நல்லவளாக மாறிவிட்டாளா? என்று சந்தேகப்படுகின்றனர்.

கடைசி சந்தோஷம்

தொடர்ந்து கயல் கல்யாணத்திற்கான புடவைகளை எடுத்துக் கொண்டு, தொழிலாளி பார்சலுக்கு கொண்டு செல்லும் பொழுது, சிவசங்கரி ஏதோ திட்டம் தீட்டி, அதில் ஒரு சதி செய்து விட்டாள். அதை நினைத்து அவள் சந்தோஷப்பட்டு கொண்டு, இதுதான் நீ கடைசியாக சந்தோஷப் படக்கூடிய நேரம் என்று கயலை பார்த்து, மனதிற்குள் சொல்லிக் கொள்கிறாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.