Kayal Serial: ‘அட தவுடுக்கு பொறந்தவளே..’-தீயை மாற்றி வைத்த தோழி.. அலறிய தீபிகா.. கடுகடுத்த கயல்!- வடிவின் திட்டம் என்ன?
Kayal Serial: கை சிவந்தால், அவர்தான் அவருக்கு உரித்தான காதலன் மீது அதிக காதல் வைத்திருக்கிறார் என்று அர்த்தம் என்று கூறினாள். இதனையடுத்து மருதாணி காய்ந்து இருவரும் கையை கழுவினர். அப்போது கயல் கை சிவக்கவே இல்லை.
கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?
கயல் சீரியலில் நேற்றைய எபிசோடில், தீபிகா கயல் வீட்டிற்கு வந்து கயலுக்கு மருதாணி வைத்தாள். அத்துடன் தானும் மருதாணி வைத்துக் கொண்டாள். இதனையடுத்து பேசிய தீபிகா, யார் கை அதிகமாக சிவக்கிறதோ, அவர்தான் அவருக்கு உரித்தான காதலன் மீது அதிக காதல் வைத்திருக்கிறார் என்று அர்த்தம் என்று கூறினாள். இதனையடுத்து மருதாணி காய்ந்து இருவரும் கையை கழுவினர். அப்போது கயல் கை சிவக்கவே இல்லை. ஆனால், தீபிகாவின் கை நன்றாகவே சிவந்திருந்தது.
இதை காரணம் காட்டி கயலை ஜாடை, மாடையாக தீபிகா பேச கோபமடைந்த கயலின் தங்கை, இன்னொரு மருதாணி கோனை எடுத்து வந்து, மீண்டும் கயலுக்கு மருதாணி வைத்தாள். இறுதியாக காய வைத்து, கழுவும் பொழுது கயலின் கை மிகவும் சிவப்பாக மாறி இருந்தது. இதையடுத்து தன்னுடைய திட்டம் தவிடு பொடியானதை நினைத்து வெட்கி தலை குனிந்தாள் தீபிகா.