Kayal Serial: கல்யாண வீட்டிற்குள் விவாகரத்து ஓலம்; கை கொடுக்காத மருதாணி; தீபிகா தீட்டிய திட்டம்! - கயல் சீரியலில் இன்று!-kayal serial today episode on september 02 2024 indicates deepika try to stop kayal marriage - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: கல்யாண வீட்டிற்குள் விவாகரத்து ஓலம்; கை கொடுக்காத மருதாணி; தீபிகா தீட்டிய திட்டம்! - கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: கல்யாண வீட்டிற்குள் விவாகரத்து ஓலம்; கை கொடுக்காத மருதாணி; தீபிகா தீட்டிய திட்டம்! - கயல் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 02, 2024 09:04 AM IST

Kayal Serial: கயலோ இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது என்று சொல்லி சபதம் ஏற்று, காய்களை கனகச்சிதமாக நகர்த்துகிறார். - கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: கல்யாண வீட்டிற்குள் விவாகரத்து ஓலம்; கை கொடுக்காத மருதாணி; தீபிகா தீட்டிய திட்டம்! - கயல் சீரியலில் இன்று!
Kayal Serial: கல்யாண வீட்டிற்குள் விவாகரத்து ஓலம்; கை கொடுக்காத மருதாணி; தீபிகா தீட்டிய திட்டம்! - கயல் சீரியலில் இன்று!

கயல் சீரியலில் நேற்று நடந்தது என்ன?

கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில், கயலுக்கான கல்யாண வேலைகள் அனைத்தும் மும்மரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் தீபிகா, தன்னுடைய தோழிகளுடன் அங்கு வருகிறாள்

அவள் தங்களது தோழிகளை அறிமுகப்படுத்தி, இவர்கள் கயலுக்கு மருதாணி வைத்து விடுவார்கள் என்று கூறுகிறாள். மேலும் தானும் மருதாணி வைத்துக் கொள்ளப் போவதாகவும், யார் தங்களை கட்டிக்கப் போகிறவர்கள் மீது அதிகம் பாசம் வைத்திருக்கிறார்களோ, அவர்களது கை மருதாணி வைத்ததில் அதிகம் சிவக்கும் என்றும் கூறினாள்.

அபசகுணமாக பேசிய் தீபிகா

இதற்கிடையே பேசிய தீபிகா, தன்னுடைய தோழிக்கு பணக்கார பையனுடன் காதல் ஏற்பட்டதாகவும், ஜாதகம் பொருந்தவில்லை என்ற போதும் கூட, அவர் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால், காலப்போக்கில் அவளுக்கும், அவரது மாமியாருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், விவாகரத்து ஏற்பட்டதாகவும் சொல்லி, கல்யாண வீட்டிற்குள் அபசகுணமாக பேசினாள்.

அவள் சொன்னதில் அதிர்ந்து போன கயலின் அம்மா, எங்கே தன்னுடைய மகளுக்கும் இது போன்று நடந்து விடுமோ என்று பயந்தாள். இதைத் தெரிந்து கொண்ட மூர்த்தி, கோபமாக வந்து, அவளை திட்டித் தீர்த்தான். இதற்கிடையே கயல் மருதாணியை கழுவும் போது, அவள் கையில் மருதாணி சிவக்கவே இல்லை. இறுதியில் இது அனைத்தும் தீபிகாவின் பிளான் என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.

ஏற்கனவே கயலின் மாமியாருக்கும், கயலுக்கு இடையே பெரிய போரே நடந்து வரும் நிலையில், தீபிகாவின் இந்த செயலால் கொதித்துப்போன கயல் என்ன செய்வதென்று தெரியாமல், அதிர்ச்சி அடைந்து நின்றாள். குடும்பத்துனரும் தீபிகாவின் இந்த செயலால் கொதித்துப்போய் நின்று கொண்டிருந்தனர். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.