Kayal Serial: மனம் மாறிய ராஜேஸ்வரி.. கயல் திருமண ஏற்பாட்டில் நடக்கும் புது ட்விஸ்ட்!-kayal serial promo today on august 27 2024 indicates kayal marriage plan in full form - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: மனம் மாறிய ராஜேஸ்வரி.. கயல் திருமண ஏற்பாட்டில் நடக்கும் புது ட்விஸ்ட்!

Kayal Serial: மனம் மாறிய ராஜேஸ்வரி.. கயல் திருமண ஏற்பாட்டில் நடக்கும் புது ட்விஸ்ட்!

Aarthi Balaji HT Tamil
Aug 27, 2024 08:27 AM IST

Kayal Serial: கயல், எழிலின் திருமண ஏற்பாடு படு பயங்கரமாக நடக்கிறது. என்ன தான் கயல் வீடு ஏறி சென்று தன் பெரியப்பா, பெரியம்மா அழைத்தாலும் அவர்கள் மனம் இன்னும் மாறவே இல்லை.

Kayal Serial: மனம் மாறிய ராஜேஸ்வரி.. கயல் திருமண ஏற்பாட்டில் நடக்கும் புது ட்விஸ்ட்!
Kayal Serial: மனம் மாறிய ராஜேஸ்வரி.. கயல் திருமண ஏற்பாட்டில் நடக்கும் புது ட்விஸ்ட்!

கயல், எழிலின் திருமண ஏற்பாடு படு பயங்கரமாக நடக்கிறது. என்ன தான் கயல் வீடு ஏறி சென்று தன் பெரியப்பா, பெரியம்மா அழைத்தாலும் அவர்கள் மனம் இன்னும் மாறவே இல்லை. ராஜலட்சுமி ஏதோ பிளான் போட, அவரின் கணவர், ” நீ செய்வது எல்லாம் தவறான ஒன்று “ என எச்சரித்தார். இருப்பினும் அவர் தனது கணவரின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. மறுபக்கம் பெரியப்பா, பெரியம்மாவும் வழக்கம் போல் ராஜலட்சுமியை ஏத்திவிட்டார்கள்.

கயல் சீரியல் ப்ரோமோ

இந்நிலையில் கயல் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 27) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், கயலுக்கு முகூர்த்த புடவை எடுக்க அனைவரும் குடும்பமாக தனது அத்தையான ராஜேஷ்வரி கடைக்கே சென்று இருக்கிறார்கள்.

மூர்த்தி தனது பெரியப்பாவிற்கு போன் செய்து, “ நீங்களும் பெரியப்பாவும் இல்லாதது, கவலையாக இருக்கிறது. அதனால் உடனே நீங்களும், பெரியம்மாவும் கிளம்பி வாங்க “ என அழைக்கிறார். அதற்கு அவரது பெரியப்பா, “ நான் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் “ என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

என்னுடைய கடைக்கு வாங்க

அதற்கு பிறகு ராஜேஸ்வரி, ” அண்ணன்,  நீங்களும், அண்ணியும் கிளம்பி உடனே என்னுடைய கடைக்கு வாங்க” என சொல்ல உடனே அவரோ, “ எதற்கு மா அங்கு வர வேண்டும்” என்று கேட்கிறார்.

ராஜேஸ்வரி, “ கயல் திருமணத்திற்கு முகூர்த்த புடவை  எடுக்க எல்லாரும் நம்ப கடைக்கு தான் வந்து இருக்கிறார்கள். அதனால் உடனே கிளம்பி நீங்களும், அண்ணியும் கடைக்கு வாங்க” என சொல்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெரியப்பா, எப்படி இவர்கள் எல்லாம் ஒன்றாக இருந்தார்கள் என அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது. 

திருமணம் நிறுத்த திட்டம்

என்ன தான் செய்து கயல் குடும்பத்தை ஒன்றாக இணைத்து கொண்டாலும், இன்னும் அவரின் திருமண விஷயத்தில் சிக்கல் இருக்க தான் செய்கிறது. பெரியப்பாவிற்கு கயல் திருமணத்தில் சற்றும் விருப்பம் இல்லை. எப்படியாவது திருமணம் நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார். 

மேலும் எந்த தடங்களும் இல்லாமல் திருமணம் நல்ல படியாக முடிந்தால் கயல் சீரியல் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.