Karthigai Deepam: தீபாவிற்காக உயிரை பணய வைத்த கீதா;கத்தியை எடுத்த துங்கா! - கார்த்திகை தீபம் அப்டேட்!-karthigai deepam serial update indicates dunga has decided to kill geetha - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: தீபாவிற்காக உயிரை பணய வைத்த கீதா;கத்தியை எடுத்த துங்கா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: தீபாவிற்காக உயிரை பணய வைத்த கீதா;கத்தியை எடுத்த துங்கா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 30, 2024 12:25 PM IST

Karthigai Deepam: கீதா துங்காவை சந்திக்க அவன், நான் உன்னையே கொல்லப்போறேன் என்று சொல்ல, அங்கே என்ட்ரி கொடுத்த கார்த்திக், துங்காவிடம் இருந்து கீதாவை காப்பாற்றுகிறான். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: தீபாவிற்காக உயிரை பணய வைத்த கீதா;கத்தியை எடுத்த துங்கா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: தீபாவிற்காக உயிரை பணய வைத்த கீதா;கத்தியை எடுத்த துங்கா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவை காப்பாற்றுவதற்காக கீதா துங்காவிடம் சரணடைய முடிவெடுத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கீதா எழுதிய லெட்டர்! - காப்பாற்ற போராடும் கார்த்திக்!

அதாவது, கீதா லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்பிச் செல்ல, ஐஸ்வர்யா இந்த லெட்டரை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். கீதா துங்காவிடம் சரணடைந்தால் அவன் தீபாவை விட்டு விடுவான்.

அதனால நமக்கு தான் ஆபத்து என அஞ்சுகிறாள். அதனால், இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என முடிவெடுக்கும் ஐஸ்வர்யா, எல்லாரையும் கூட்டி லெட்டரை காட்டி விஷயத்தை சொல்ல, கார்த்திக் கீதாவை காப்பாற்ற கிளம்பிச் செல்கிறான்.

கொல்லத்துணியும் துங்கா - அதிர்ச்சியில் கீதா

மறுபக்கம் கீதா துங்காவை சந்திக்க அவன், நான் உன்னையே கொல்லப்போறேன் என்று சொல்ல, அங்கே என்ட்ரி கொடுத்த கார்த்திக், துங்காவிடம் இருந்து கீதாவை காப்பாற்றுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

வீட்டிற்கு வந்த கார்த்திக், தீபாவின் நினைவுகளை நினைத்து கீதாவிடம் வருத்தத்துடன் பேசினான். மறுபக்கம் துங்காவிடமிருந்து தப்பித்து, ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்த சக்தி, நடந்த விஷயங்களை அங்கு இருக்கும் நர்ஸ்ஸிடம் கூறினாள்.

தீபாவுக்கு உடல்நிலை சரியாக வாய்ப்பு

அது மட்டுமின்றி, தீபாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்க, அவள் பாடிய பாடலையே எல்லோரும் சேர்ந்து பாடினால், தீபாவுக்கு உடல்நிலை சரியாக வாய்ப்பு உள்ளது என ஒன்று சேர்ந்து பாட முடிவெடுத்தனர்.

முடிவில் உறுதியாக இருக்கும் அபிராமி

இன்னொரு பக்கம், அபிராமி தீபா நல்லபடியாக திரும்பி வரவேண்டும் என கோயிலுக்கு வந்து தீச்சட்டி எடுக்க, கார்த்திக் உட்பட எல்லோரும் அது வேண்டாம் என தடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால், அபிராமி தனது முடிவில் உறுதியாக இருந்தாள். தீபாவுக்காக மொத்த குடும்பமும் காத்திருப்பதை பார்த்த கீதா, நான் இந்த வீட்ல இருக்கிற வரைக்கும் துங்கா தீபாவை விட மாட்டான் என கணக்கு போட்டாள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.