Karthigai Deepam Serial: போலீசாரிடம் சிக்கிய ஐஸ்வர்யா.. அபிராமி விஷயத்தில் அதிர்ச்சி கொடுத்த டாக்டர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam Serial: போலீசாரிடம் சிக்கிய ஐஸ்வர்யா.. அபிராமி விஷயத்தில் அதிர்ச்சி கொடுத்த டாக்டர்

Karthigai Deepam Serial: போலீசாரிடம் சிக்கிய ஐஸ்வர்யா.. அபிராமி விஷயத்தில் அதிர்ச்சி கொடுத்த டாக்டர்

Aarthi Balaji HT Tamil
Jun 20, 2024 05:58 PM IST

Karthigai Deepam Serial: அபிராமியை செக்கப் செய்த டாக்டர் கார்த்தியை உள்ளே அழைக்க அவன் உடைந்து போய் இருக்கும் அருணாச்சலத்தையும் தன்னுடன் அழைத்து செல்கிறான், டாக்டர் மூணு இடத்துல குண்டு பாய்ந்து இருக்கு என சொல்கிறார்.

போலீசாரிடம் சிக்கிய ஐஸ்வர்யா.. அபிராமி விஷயத்தில் அதிர்ச்சி கொடுத்த டாக்டர்
போலீசாரிடம் சிக்கிய ஐஸ்வர்யா.. அபிராமி விஷயத்தில் அதிர்ச்சி கொடுத்த டாக்டர்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய ( ஜூன் 19 )  எபிசோடில் அபிராமி மீது குண்டு பாய்ந்த நிலையில் இன்று ( ஜூன் 20 ) நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

நீங்க படிச்சவங்க தானே

அதாவது பதற்றத்துடன் மொத்த குடும்பமும் அபிராமியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகின்றனர், ஆளாளுக்கு கலங்கியபடி வர ஐஸ்வர்யா ஐயோ நான் மாட்டிப்பேன் போலயே, ஜெயிலுக்கு போகணுமா என்று ஓவர் ஆக்டிங் செய்ய டாக்டர் ஏன்மா நீங்க படிச்சவங்க தானே.. ஹாஸ்பிடலில் எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா என்று திட்டுகிறார்.

அபிராமியை செக்கப் செய்த டாக்டர்

பிறகு அபிராமியை செக்கப் செய்த டாக்டர் கார்த்தியை உள்ளே அழைக்க அவன் உடைந்து போய் இருக்கும் அருணாச்சலத்தையும் தன்னுடன் அழைத்து செல்கிறான், டாக்டர் மூணு இடத்துல குண்டு பாய்ந்து இருக்கு.. உடனடியா ஆபரேஷன் பண்ணியாகனும். அப்போதும் பிழைக்க 20 % தான் வாய்ப்பு இருக்கு என்று பேரதிர்ச்சி கொடுக்கிறார்.

தொடங்கப்பட்ட ஆப்ரேஷன் வேலை

இதனை தொடர்ந்து கார்த்திக் ஆப்ரேஷன் பண்ணுங்க என்று சொல்ல கையெழுத்து எல்லாம் வாங்கி கொண்டு ஆப்ரேஷனுக்காக வேலைகளை தொடங்கப்படுகிறது. இந்த நேரத்தில் ரியா ஐஸ்வர்யாவுக்கு போனை போட்டு ஒரு இடத்திற்கு வர சொல்ல ஐஸ்வர்யா முடியாது என்று சொல்ல உன்னையும் சேர்த்து மாட்டி விட்டுடுவேன் என்று மிரட்டி சம்மதிக்க வைக்கிறாள்.

அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா

பிறகு ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து நழுவி செல்ல ஆனந்த் இவங்க தான் கைது பண்ணுங்க என்று போலீசிடம் சொல்ல ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள், பிறகு ஆனந்த் இவங்க இல்ல.. இவங்க என்னுடைய தம்பி பொண்டாட்டி என்று சொல்கிறான். இருந்தாலும் போலிஸ் ஐஸ்வர்யாவை எங்கேயும் போக விடாமல் விசாரிக்கக் வேண்டும் என்று அழைத்து செல்கிறார்கள்.

இவங்க என்னுடைய தம்பி பொண்டாட்டி என்று சொல்கிறான். இருந்தாலும் போலிஸ் ஐஸ்வர்யாவை எங்கேயும் போக விடாமல் விசாரிக்கக் வேண்டும் என்று அழைத்து செல்கிறார்கள்.

சொன்ன இடத்துக்கு வா

போலீஸ் விசாரணையின் போது ரியா தொடர்ந்து போன் செய்ய லேடி கான்ஸ்டபிள் போனை எடுத்து பேச ரியா நான் சொன்ன இடத்துக்கு வா என்று மிரட்டுகிறாள். யார் அந்த ரியா என்று போலிஸ் விசாரிக்க இது அந்த ரியா இல்ல.. நான் ஒருத்தவங்க கிட்ட கடன் வாங்கி இருக்கேன், அவங்க போன் பண்றாங்க என்று சமாளிக்க முயற்சிக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.