Karthigai Deepam: கார்த்தி, தீபாவை சிக்க வைக்க சூழ்ச்சி.. நடக்க போவது என்ன?
கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அபிராமி வீட்டில் எல்லோரும் தூங்கிய பிறகு எழுந்து வரும் தீபா வீட்டு வாசலில் கோலம் போடுகிறாள். பிறகு அவள் மேலே செல்லும் போது வீட்டில் சத்தம் கேட்டு வேலைக்காரி எழுந்து வெளியே வந்து பார்க்க கோலம் அழகாக போட்டிருந்ததை பார்த்து மீனாட்சியிடம் சென்று நீங்க தான் கோலம் போட்டிங்களா? என கேட்க மீனாட்சி சமாளித்து அனுப்புகிறாள்.
அதன் பிறகு அபிராமிக்கு கட்டு பிரிக்க கண் ஓரளவிற்கு தெரிய தொடங்குகிறது. பிறகு பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்குகிறது. இந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் நட்சத்திரா கோவிலுக்கு சென்று வந்ததாக பிரசாதத்தை கொடுக்கிறாள். அபிராமி நட்சத்திரா அம்மா பற்றி கேட்க அவர் திருப்பதி சென்றிருப்பதாக சமாளிக்கிறாள்.
இந்த நேரத்தில் நட்சத்திராவின் டூப்ளிகேட் அம்மா வந்து நிற்க அபிராமி நீங்க திருப்பதி போய்ட்டதாக கேட்க பூஜை என தெரிந்து வந்து விட்டதாக சொல்ல பிறகு நட்சத்திரா மற்றும் டூப்ளிகேட் அம்மாவிடம் சண்டை போடுகிறாள்.
மறுபக்கம் கார்த்தி ரூமுக்குள் தீபாவிடம் புடவை ஒன்றை கொடுத்து கட்டிக்க சொல்ல அப்போது நட்சத்திரா உள்ளே வர தீபா மறைந்து கொள்கிறாள். பிறகு யாருக்கும் தெரியாமல் ரெக்கார்டிங்க் ஆன் செய்து வைத்து விட்டு வெளியே வர தீபா, கார்த்தி பேசுவதெல்லாம் ரெக்கார்ட் ஆகிறது.
கீழே பூஜை தொடங்க அபிராமி முருகன் பாடலை பாட கொஞ்ச நேரத்தில் முருகன் அடியார்கள் வர தொடங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்