50 Years Of Karaikkal Ammaiyar: புனிதவதியாக பிறந்து காரைக்கால் அம்மையார் ஆன கதை!-இப்படம் வெளிவந்து 50 ஆண்டுகள் நிறைவு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  50 Years Of Karaikkal Ammaiyar: புனிதவதியாக பிறந்து காரைக்கால் அம்மையார் ஆன கதை!-இப்படம் வெளிவந்து 50 ஆண்டுகள் நிறைவு

50 Years Of Karaikkal Ammaiyar: புனிதவதியாக பிறந்து காரைக்கால் அம்மையார் ஆன கதை!-இப்படம் வெளிவந்து 50 ஆண்டுகள் நிறைவு

Manigandan K T HT Tamil
Oct 25, 2023 04:45 AM IST

ரேழு உலகத்திலும் கிடைக்காது என்று கூறி அது கிடைத்த விபரம் கேட்க அது சிவனார் தந்தது எனக் கூறியதை அவனால் ஏற்கவே முடியவில்லை.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்

இவருடைய மகள் தான் புனிதவதி. சிறு வயதில் இருந்தே சிவபெருமானின் திருவடிகளை வணங்கியும், பக்தி செலுத்தியும்,சிவன் அடியார்களுக்கு அன்பான உபசரிப்பை நல்கி, அவர்தம் நலன்களை ப் போற்றும் இயல்பு உடையவர்.

திருமண வயதுக்கு வந்தபோது, மரபிற்கேற்றபடி நாகப்பட்டினத்திலுள்ள வணிகர் தலைவர் நிதிபதி என்பவரின் மகன் பரமத்தனுக்கு, நிச்சயமாகி, சுற்றமும் நட்பும் சூழ நன்கு திருமணம் நடந்தேறியது.

ஒரே மகள் ஆகையால் அருகிலேயே அவர்களுக்கு வீடு பார்த்து வைத்து, நல்ல தொழிலும் வைத்துக் கொடுத்தார். குடும்பம் நல்ல படியாக நடந்தது. புனிதவதி வழக்கம் போல சிவநேசம் பெருக, சிவனடியார்களுக்கு உணவளிப்பது, புத்தாடைகள் தருவது என்ற வழக்கம் தொடர்ந்தது.

ஒருநாள், பிரம்மதத்தன், இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு அனுப்பி வைக்கச் சொல்ல, அதே நேரத்தில் வெளியூரிலிருந்து சிவன் அடியார் ஒருவர் உணவு அருந்த வீட்டிற்கு வந்தார்.

புனிதவதி, அடியார்க்கு அன்னம் இட்டபின் கூடவே ஒரு மாங்கனியை நறுக்கி அவருக்குத் தர, அவரும் மன மகிழ்ந்து உண்டு, ஆசிகூறிச் சென்றார். மதியம் உணவருந்த வீடு வந்து, மாம்பழம் சாப்பிட்ட பிரம்மதத்தன், மற்றொன்றை கேட்க, புனிதவதி தடுமாறிக் கணவர் என்ன கூறுவாரோ என்று குழப்பமடைந்து, பயந்து, சிவபெருமானை வேண்டி, ஒரு மாம்பழம் உடனே கிடைக்க, அதை பழத் துண்டுகளாக்கி கணவரிடம் கொடுத்து உண்மையைச் சொன்னார்.

பின்பு, அதன்சுவை கண்டு, ஈரேழு உலகத்திலும் கிடைக்காது என்று கூறி அது கிடைத்த விபரம் கேட்க அது சிவனார் தந்தது எனக் கூறியதை அவனால் ஏற்கவே முடியவில்லை.

சோதிப்பதற்காக இன்னும் ஒரு பழம் கேட்கச் சொல்லப் புனிதவதி கேட்க, மீண்டும் ஒரு பழம் கைக்கு வந்தது. இதைக் கண்ட தத்தன் ஒரு கணம் செயலற்று நின்று, தம் மனதுக்குள் இவள் ஒரு தெய்வம், மனைவியாகக் குடும்பம் நடத்த முடியாது என தீர்மானித்துத் தாம் வெளியூர் சென்று வணிகம் செய்யப் போவதாய்க்கூறிச் சென்று விட்டான்.

வணிகத்திற்காக வெளியூர் சென்ற பிரம்மதத்தன், பின்பு பாண்டிய நாடு சென்றபின் அங்கேயே ஒரு பெண்ணை மணமுடித்து, ஒரு குழந்தை பிறந்து, அதற்கு புனிதவதி என்றே பெயர் வைத்தான். ஒருநாள் தனது மனைவி , குழந்தை சகிதம், புனிதவதி இல்லம் வந்து, அவர் பாதங்களில் அனைவரும் விழுந்து அவரின் அருளால் தான் வாழ்வதாக்கூறி அழுது கும்பிட்டார்.

தட்டிக் கேட்ட சுற்றத்தாருக்கு இவர் ஒரு சாதாரண மானிடப் பிறவி அல்ல, தெய்வம் என கூற, சுற்றத்தார் மரியாதை கலந்த பயத்துடன் செய்வதறியாது திகைத்து வெளியேறினர். மனம் வேதனையில் துடிக்க வாழ்வை வெறுத்து, தனது அழகு நீங்கி எலும்புக் கூடு போன்ற பேய் வடிவம் தந்து அருள் என சிவபெருமானை வேண்டி, அதன்படி உருவம் அமைந்தது.

பின்னர் பல தலங்களுக்கும் சென்று இறுதியில் கயிலையில் சிவ தரிசனம் செய்ய உத்தேசித்து புறப்பட்டுப் போய் கைலாயத்தில் காலால் நடக்காது தனது தலையால் நடந்து போக, இதைக் கண்ட பார்வதி தேவி புரியாமல் வினவ, சிவன் புன்னகைத்து "இவள் நம்மைப் போற்றும் அம்மை" என்றார்.

ஈசனே அம்மை என்றழைத்ததால் இவரைக் காரைக்கால் அம்மையார் என்று அழைத்தனர்.

இவரது வாழ்க்கைக் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் காரைக்கால் அம்மையார். இந்தப் படம் 1973ம் ஆண்டு வெளியானது. சிவக்குமார், மனோரமா, லட்சுமி, முத்துராமன், ஸ்ரீவித்யா என நடிப்பு பட்டாளம் நிறைந்த படமாக தயாரானது. பக்தி படங்களை இயக்கி புகழ்பெற்ற ஏ.பி.நாகராஜன் இப்படத்தை சிறப்பாக இயக்கினார். குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.