Kangana Ranaut: ‘தப்பு பண்ற எல்லாத்துக்கும் இங்க காரணம் இருக்கு’- அதிகாரிக்கான ஆதரவு குரலுக்கு கங்கனா ரனாவத் பதிலடி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kangana Ranaut: ‘தப்பு பண்ற எல்லாத்துக்கும் இங்க காரணம் இருக்கு’- அதிகாரிக்கான ஆதரவு குரலுக்கு கங்கனா ரனாவத் பதிலடி

Kangana Ranaut: ‘தப்பு பண்ற எல்லாத்துக்கும் இங்க காரணம் இருக்கு’- அதிகாரிக்கான ஆதரவு குரலுக்கு கங்கனா ரனாவத் பதிலடி

Kalyani Pandiyan S HT Tamil
Jun 08, 2024 06:06 PM IST

Kangana Ranaut: தன்னை அறைந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிளை புகழ்ந்தவர்களை கங்கனா கண்டித்திருக்கிறார். - கங்கனா ரனாவத்

Kangana Ranaut:  ‘தப்பு பண்ற எல்லாத்துக்கும் இங்க காரணம் இருக்கு’- அதிகாரிக்கான ஆதரவு குரலுக்கு கங்கனா ரனாவத் பதிலடி
Kangana Ranaut: ‘தப்பு பண்ற எல்லாத்துக்கும் இங்க காரணம் இருக்கு’- அதிகாரிக்கான ஆதரவு குரலுக்கு கங்கனா ரனாவத் பதிலடி

விளக்கம் அளித்த கங்கனா ரனாவத் 

இதுகுறித்து பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில்,  "நான் பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு ஒன்றும் ஆகவில்லை, நான் நன்றாக இருக்கிறேன். சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன் இரண்டாவது கேபினில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் என் முகத்தில் அறைந்தார்." என்று அவர்அந்த பதிவில் கூறி இருந்தார். 

தனது கன்னத்தில் அறைந்த அதிகாரியான குல்விந்தர் கவுரின் மீது சிஐஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் நினா சிங்கிடமும் கங்கனா ரனாவத் புகார் அளித்தார். கங்கனா டெல்லியில் போராடும் விவசாயிகள் குறித்து தவறாக பேசியதாகவும், அந்த கருத்துக்களால் அதிருப்தி அடைந்த குல்விந்தர் கவுர் கங்கனாவை அறைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீது காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

பெண் அதிகாரிக்கு ஆதரவாக பேசிய மக்கள் 

இந்த நிலையில் சிஐஎஸ் எஃப் அதிகாரிக்கு ஆதரவாக பலர் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். இதைப்பார்த்து அதிருப்தியான கங்கனா, தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், “ கற்பழிப்பு, கொலை, திருட்டு ஆகியவற்றில் ஈடுபடும் குற்றவாளிகள், அதற்கான உணர்ச்சி, உடல், உளவியல் அல்லது பணம் சார்ந்த காரணங்களை கொண்டிருக்கின்றனர். இங்கு எந்த ஒரு குற்றமும் காரணமின்றி நடக்காது. இருப்பினும், அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். நீங்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்தால், குற்றவாளிகளுக்கு அது ஒரு உந்துதலாக இருக்கும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இரண்டு குழந்தைகள் உள்ளனர்

பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூர் லோதியைச் சேர்ந்த கவுர் விவசாயத் தலைவர் ஷேர் சிங் மல்ஹிவாலின் சகோதரி ஆவார். கவுரின் கணவரும் ஜம்முவில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் இல் பணியமர்த்தப்பட்டுள்ளார், தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் திரண்டுள்ள நிலையில், ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.