பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நடிகர் கமல் ஹாசன் நன்றி! எதுக்கு தெரியுமா?
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்து கடந்த தீபாவளி அன்று வெளியான திரைப்படம் அமரன். இப்படத்தினை பார்த்த பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை படத்தையும், படக்குழுவினரையும் வாழ்த்தி அவரது ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்து கடந்த தீபாவளி அன்று வெளியான திரைப்படம் அமரன். இப்படத்தினை பார்த்த பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை படத்தையும், படக்குழுவினரையும் வாழ்த்தி அவரது ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமலஹாசன் வாழ்த்திய அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ படை வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை அடுத்து அவரது வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு அமரன் படம் உருவானது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தினை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம் நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும் தீபாவளி அன்று வெளியான இந்தப் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஐந்தாவது நாளான இன்றும் ஹவுஸ்புல் காட்சிகளோடு படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தின் வசூல் நூறு கோடியை கடந்துள்ளது என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது இப்படத்தினை பார்த்த பல பிரபலங்கள் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலை வாழ்த்து
இப்படத்தினை பார்த்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவறது டிவிட்டரில், 'அமரன்’ படம் பார்க்க நேர்ந்தது. இது பல அம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். சீருடையில் இருக்கும் நமது ஆண்கள் காட்டும் வீரம், தைரியம் மற்றும் நேர்மை. எஞ்சியவர்களைக் காக்க நம் தேசம் தங்களைத் தியாகம் செய்யும் போது ஒரு குடும்பம் செலுத்தும் செலவின் தெளிவான சித்தரிப்பு.
ஏன் சிலர் எப்பொழுதும் மற்றவர்களை விட மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக இருப்பார்கள் - ஏனென்றால் அவர்கள் தங்கள் சீருடையை பெருமையுடன் அணிந்துகொண்டு அவர்களை காயப்படுத்தும் வழியில் செல்வார்கள். உணர்ச்சிகரமான உழைப்பு மற்றும் வலியை ஒரு இராணுவ வீரரின் குடும்பம் பெருமையுடன் சுமக்கும். மேஜர். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை யுகங்களுக்கு உத்வேகம் தரும் கதை. 2014 இல் அவர் நம் தேசத்துக்காக செய்த இறுதித் தியாகம், எங்களுக்குள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டோம் என்ற உணர்வை நம் அனைவரையும் ஏற்படுத்தியது, அப்போது நான் காக்கியில் இருந்தபோது அந்த உணர்ச்சிகரமான தருணங்களை நான் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன்.
அற்புதமான இயக்கம் , அசாதாரண சித்தரிப்பு மூலம். சிவகார்த்திகேயன் தனது நடிப்பு வாழ்க்கையில் ஒரு பெரிய பக்கம் திரும்பியவர், எந்த ஒரு கதாபாத்திரத்திலும் இல்லாத கதாபாத்திரமாக இருந்த சாயபல்லவி இறுக்கமான இசை, உணர்திறன் மற்றும் சிறப்பான கேமரா மேனிற்கு சிறப்பு நன்றி இந்தப் படத்தைத் தயாரித்தற்காக கமல் அவர்களுக்கும் நன்றி.
சீருடை அணிந்த அனைத்து சேவை செய்யும் ஆண்களுக்கும், மற்றும் நாம் இழந்தவர்களுக்கு இது ஒரு அஞ்சலி என்று நான் நினைக்கிறேன்.எங்கள் இந்திய ஆயுதப்படை வாழ்க, நாங்கள் அதை பெருமையுடன் சொல்கிறோம். நீங்கள் தான் சிறந்தவர்.இந்த அசாதாரண திரைப்படத்திற்கு அமரன் குழுவிற்கு நன்றி. எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கு கமல் ஹாசன் அவரது எக்ஸ் தளத்தில், 'தமிழக பாஜக தலைவர், தம்பி அண்ணாமலை அவர்கள் அமரன் திரைப்படம் அவருக்கு ஏற்படுத்திய உணர்வலைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி' எனக குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் நன்றி தெரிவித்துள்ளனர்.
டாபிக்ஸ்