Bigg boss season 7: 4 வது போட்டியாளர்.. இயக்குநர் கனவு.. முதல் நாளே கொட்டு வைத்த கமல்.. யார் இந்த பிரதீப் ஆண்டனி!
Bigg boss season 7 Pradeep Antony: பிக்பாஸில் 4 ஆவது போட்டியாளராக நுழைந்தார் நடிகர் பிரதீப் ஆண்டனி.
இயக்குநர் கனவோடு கோடம்பாக்கத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் இயக்குநர்களில் ஒருவர் பிரதீப் ஆண்டனி. ரேடியோ, ஓடிடி உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் அருவி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து வாழ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அண்மையில் வெளியான டாடா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
அறிமுக வீடியோவில் பணத்தை பெரிதாக பேசிய பிரதீப்பிடம் கமல் என்ன பணத்தை கோலாக வைத்து இருக்கிறீர்கள் போல.. என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பிரதீப், 50 லட்சம் ஜெயித்து நானே என்னுடைய படத்தை தயாரிக்க வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்த கமல், இன்னொருத்தருக்கு கதை சொல்வதுதான் உங்களுடைய வேலை. அந்த ஒருவரை சமாளிக்கும் போது, ஆடியன்ஸை சமாளிக்க முடியும். இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கூட ஒரு ஸ்டியோவில் வேலை செய்வது போல நடிக்க, அங்கு ஒருவர் நம் ஆள் போல இருக்கிறாரே என்று வேலை கொடுத்ததாக சொல்வார்கள். அவருக்கு வீடியோ கேம் கிட் பரிசாக கொடுக்கப்பட்டது.
டாபிக்ஸ்