Vanitha vijayakumar: ‘ரெட் கார்டுனு சொல்லி.. முகத்துல ஒரே குத்து.. கையெல்லா நடுங்கிடுச்சு’ - வனிதா விஜயகுமார்!
வனிதா விஜயகுமார், அண்மையில் தனக்கு நடந்த தாக்குதல் குறித்து பேசி இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகையான வனிதா விஜயகுமார் இந்தியா கிளிட்ஸ் சேனலில் விமர்சனம் செய்து வருகிறார்.
அந்த வகையில், பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்த விவகாரத்தில் கமலுக்கு ஆதரவாக, வனிதா விஜயகுமார் பேசினார். இந்த நிலையில், இதனை காரணம் காட்சி மர்ம நபர் ஒருவர் அண்மையில், அவர் மீது தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் குறித்து வனிதா விஜயகுமார் இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “ இன்றைய உலகில் நமக்கு நடப்பவற்றை பற்றி, நாம் வெளியே சொன்னால் மட்டும்தான், யாராவது ஒருவர் அதைப் பார்த்து திருந்துவார்.
மனரீதியாக ஆண்களை விட பெண்களுக்கு அதிக பலம் இருக்கிறது. ஆனால் உடல்பலம் குறைவு! நாம் அரசியல்வாதியாக இருக்கும் பொழுதும் அல்லது சினிமா பிரபலமாக இருக்கும் பொழுதும், நமக்கு முகம் என்பது மிக மிக முக்கியம். அப்படி இருக்கும் பொழுது, இந்த முகத்தை வெளியே காண்பிக்க கூடாது என்பதற்காகத்தான், மிகவும் கேவலமான ஒரு செயலை ஒருவர் செய்து இருக்கிறார்.
நான் தாக்கப்பட்டவுடன் ஏன் அதனை சோசியல் மீடியாவில் பதிவிட்டேன். இதனை பொய் என்றும் செட்டப் என்றும் சொல்வார்கள் என்று எனக்கு முன்னமே தெரியும். இது பொதுமக்கள் அல்ல என்னுடைய குடும்ப உறுப்பினர்களே இதை நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு மட்டமான மக்கள் வாழும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு சிலருக்குத்தான் புரிதல், மனிதாபிமானம் உள்ளிட்டவை இருக்கும். அது கூட இல்லை என்றால், நீ மனிதனே கிடையாது. தாக்குதல் நடந்த அன்றைய தினம், நான் அங்கே இருக்கிறேன் என்பதை அவர்கள் மிக தெளிவாக தெரிந்து கொண்டு தான், என்னை தாக்க வந்திருக்கிறார்கள்.
நான் இருந்த அந்த இடத்தில் பெரிதாக பாதுகாப்பிற்கு என்று காவலர்கள் கிடையாது. நான் காரை எடுப்பதற்காக கீழே வந்த போது, இருட்டில் இருந்த மர்ம நபர் ஒருவர் என்னை அப்படியே திருப்பி, முகத்தில் அடித்தார். அவர் ரெட்கார்டு…. என்றும் அதில் நீ சப்போர்ட் வேற… என்றும் சொல்லியது மட்டும் எனக்கு கேட்டது. என்னை தாக்கிய உடன் என்னுடைய கையெல்லாம் நடுங்கி விட்டது.
நான் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். காலையில் நடந்தவற்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டு விட்டு தூங்கிவிட்டேன். விழித்துப் பார்த்தால், காவலர்கள் வந்து நின்றார்கள். எனக்கு பர்சனலாக காவல் ஒருவரையும் பாதுகாப்பிற்கு கொடுத்திருக்கிறார்கள்.” என்று பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்