ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப்போர் ஓடிடி வெளியீடு எப்போது? புது அப்டேட்!
மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள படம் "கடைசி உலகப்போர்", இப்படம் குறித்தான ஓடிடி வெளியீடு குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பின்னணி பாடகராக அறிமுகமாகி தற்போது இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளார் என பல பரிமாணங்களில் இயங்கி வருபவர் ஹிப்ஹாப் ஆதி, இவர் முதன் முதலாக மீசைய முறுக்கு என்ற படத்தை நடித்து இயக்கி இருந்தார். முதன் முதலாக ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து பாடி வந்தார். பின்னர் இசையமைப்பாளர் அனீருத் உடன் இணைந்து சில பாடல்களை பாடியுள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
அதனைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2 மற்றும் 4, இமைக்கா நொடிகள், கோமாளி உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு மீசைய முறுக்கு படம் வாயிலாக இயக்குனராகவும், நடிகராகவும் புது அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், வீரன் ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார்.
ஆல் இன் ஆல்
கடந்த செப்டம்பர் 20 அன்று திரையரங்குகளில் கடைசி உலகப்போர் படம் வெளியானது. அந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதியே இயக்கி, இசையமைத்து, தயாரித்து மற்றும் நடித்தும் இருந்தார். ஐநா சபையில் இருந்து சீனா, ரஷ்யா வெளியேறி ஐநா சபைக்கு மாற்றாக ரிப்பப்ளிக் என்கிற ஒரு அமைப்பை கொண்டு வருகிறது. இந்த அமைப்பில் 72 நாடுகள் சேர்கின்றன. ஆனால் இந்த அமைப்பில் இந்தியா சேரவில்லை. இதனால், கோபாமடைந்த ரிப்பப்ளிக் அமைப்பினர் இந்தியா மீது பல வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி இந்தியாவை மொத்தமாக அழிக்க திட்டம் போடுகின்றனர்.முதலில் சாதாரணமாக ஆரம்பமான கலவரம் நாடே அழியும் நிலைக்கு கொண்டு வந்த விடுகிறது. நாடு முழுவதும் ராணுவத்தின் காட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. இந்த நேரத்தில் ரிப்பப்ளிக் அமைப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்துகிறது. இதில், சென்னை முற்றிலுமாக அழிந்துவிடுகிறது. அதற்கு பிறகு என்ன ஆனது என்பது தான் படத்தின் இரண்டாவது பாதி கதை.