Rajinikanth: நீசமான நீலாம்பரி கேரக்டர்.. படையப்பா ரீல் பெட்டியை தூக்கிய ஜெயலலிதா.. மரணபீதி அடைந்த கே.எஸ்.ரவி!
படையப்பா திரைப்படத்தின் ரீலை ஜெயலலிதா தூக்கிச்சென்ற சம்பவம் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்து இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “படைப்பா திரைப்படத்தின் புட்டேஜ் முதலில் 4 மணி நேரத்திற்கு இருந்தது. படம் பார்த்தவர்கள் அனைவரும், படத்தின் நீளத்தை குறைக்கச் சொன்னார்கள். நான் எடிட் செய்து படத்தை மீண்டும் போட்டு காண்பித்தேன். அதனை ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பார்த்தனர்.
படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரஜினி சார், வெறுமனே ஓகே என்று சொல்லி கை கொடுத்து விட்டு சென்று விட்டார். எனக்கு ஒரே வருத்தம். காரணம் என்னவென்றால், படம் முடித்து விட்டு பார்ட்டி என்று அவர் சொல்லியிருந்தார். அதைப்பற்றி அவர் எதுவும் பேசாத காரணத்தால், நான் தலையை பிய்த்துக்கொண்டு இருந்தேன்.
இரவு 11 மணிக்கு அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. பார்ட்டிக்கு கூப்பிடாததிற்கான காரணத்தை கூறினார். படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, படம் பார்த்த அவரின் நண்பர்கள் குசுகுசுவென எதையோ பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளத்தான், என்னை அழைத்து செல்ல வில்லை என்று அவர் சொன்னார்.