September 20 Movies: ‘கடைசி உலகப்போர்’ முதல் ‘நந்தன்’ வரை.. செப்டம்பர் 20 அன்று வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?
September Movies: செப்டம்பர் 20ம் தேதி வெளியாகும் படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
செப்டம்பர் 20ம் தேதி வெளியாகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
பிளாக்
நடிகர் ஜீவா, நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து ‛பிளாக்' என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்தை இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கி இருக்கிறார். ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம். சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்தப்படம் வருகிற செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது.
நந்தன்
அடிப்படையில் பத்திரிகையாளராக இருந்து, இயக்குநராக மாறிய இரா.சரவணன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘உடன் பிறப்பே’ படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவரது இயக்கத்தில் மீண்டும் சசிகுமார் நடித்திருக்கிறார். நந்தன் என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘இரா’ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
‘மெரினா’, ‘வாகை சுடவா’, ‘தாண்டவம்’, ‘எதிர்நீச்சல்’, உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் சதீஷ். இவர் ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அடுத்ததாக 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்தார்.
இவரது நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் ‘சட்டம் என் கையில்’. 'சிக்ஸர்' படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படத்தில் நடிகை சம்பதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கிறது.
தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. ‘சர்தார்’, ‘ரன்பேபி ரன்’ படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப்படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது.
இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி 2017-ல் வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார். தற்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘கடைசி உலகப் போர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப்படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது.
மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொள்ள படத்தை ஜோ திரைப்படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் புரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்தப்படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்