Jayam Ravi: மாமியாரால் வந்த வினை?..மடிந்து போன காதல் வாழ்க்கை.. ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவிற்கான காரணம் என்ன?
Jayam Ravi: கல்யாணம் முடிந்த பின்னர் அவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கிடையே நல்ல புரிதல் இருந்தது. - ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவிற்கான காரணம் என்ன?
(1 / 5)
பிரபல நடிகரான ஜெயம்ரவி தன்னுடைய மனைவியான ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், இவர்களின் பிரிவுக்கான காரணம் குறித்து பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஃபிலிம் ஃபிளிக் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்திருந்தார்.
(2 / 5)
அந்தப்பேட்டி இங்கேஇது குறித்து அதில் அவர் பேசும் போது, “ஜெயம் ரவியும், ஆர்த்தியும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அது காதல் திருமணம் என்றாலும், கடைசியில் பெற்றோர்களால் பார்த்து வைக்கப்பட்ட திருமணமாகவே அது மாறிப்போனது. ஜெயம் ரவி தரப்பில் இந்த கல்யாணத்தில் அவர்களுக்கு பெரிதாக விருப்பம் இல்லை. ஆனால் பெண் வீட்டார் தரப்பு, ரவியை நெருக்கிப்பிடித்து கைக்குள் போட்டுக் கொண்டு கல்யாணம் நடத்தி வைத்து விட்டார்கள்.
(3 / 5)
கல்யாணம் முடிந்த பின்னர் அவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கிடையே நல்ல புரிதல் இருந்தது. அவர்களுக்கு இரண்டு மகன்களும் பிறந்தார்கள். முதல் மகன் கூட டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருந்தார்.
(4 / 5)
ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கான கதைத்தேர்வில் கூட அவர்களின் தலையீடு அதிகம் வந்து விட்டதாம். இது ரவியின் தொழிலை பாதிக்க ஆரம்பித்துவிட்டது.
(5 / 5)
இது ஜெயம் ரவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பொறுத்து, பொறுத்து பார்த்த அவர், இப்படி நாம் வாழ்வதற்கு ஆர்த்தியை விவாகரத்தே செய்து கொண்டு வாழ்ந்து விடலாம் என்று முடிவெடுத்து விட்டார். அதற்கான விண்ணப்பத்தையும் அவர் நீதிமன்றத்தில் கொடுத்துவிட்டார். ஆனால் ஆர்த்தி, ஜெயம் ரவியுடன் இணைந்து வாழ விருப்பப்படுவதாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்