Janhvi Kapoor: சென்னையில் இருந்து மும்பை திரும்பிய ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி! ஃபுட்பாய்சன் காரணமாக சிகிச்சை
சென்னையில் இருந்து மும்பை திரும்பிய ஜான்வி கபூர் ஃபுட்பாய்சன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் இருந்து மும்பை திரும்பிய ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி
பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக இருப்பவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது உலாஜ் என்ற இந்தி படத்தில் நடித்து வரும் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜான்வி கபூருக்கு ஃபுட்பாய்சன்
ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதை அவரது தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் உறுதிபடுத்தியுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வரும் அவரை இன்னும் ஓரிரு நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.