Janhvi Kapoor: என்னது இவரா.. காதலன் பெயரை உளறிய ஜான்வி கபூர்-janhvi kapoor exposed her boy friend name - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Janhvi Kapoor: என்னது இவரா.. காதலன் பெயரை உளறிய ஜான்வி கபூர்

Janhvi Kapoor: என்னது இவரா.. காதலன் பெயரை உளறிய ஜான்வி கபூர்

Aarthi V HT Tamil
Jan 03, 2024 07:17 AM IST

ஜான்வி கபூர் தனது காதலன் பெயரை முதல் முறையாக தெரிவித்தார்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர் (Instagram/@janhvikapoor)

இந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஜான்வியும், பஹாரியாவும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக தோன்றினர். இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், இவ்விவகாரத்தில் இருவரும் மவுனம் காத்து வருகின்றனர். இருப்பினும், சமீபத்தில் ஜான்வி கபூர் தனது சகோதரி குஷி கபூருடன் 'காஃபி வித் கரண் 8' என்ற டாக் ஷோவில் பங்கேற்றார்.

கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய இந்த பிரபலமான நிகழ்ச்சியில் ஜான்வி, பஹாரியாவுடனான தனது உறவைப் பற்றி ஒரு குறிப்பைக் கொடுத்தார்.

காஃபி வித் கரண் 8 இன் அடுத்த எபிசோடின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த எபிசோடில் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் விருந்தினர்களாக வந்திருந்தனர். உறவுகள் மற்றும் டேட்டிங் பற்றிய தகவல்களை அவர்களிடம் பெற கரண் ஜோஹர் கடுமையாக முயன்றார். கேள்விகள் கேட்கப்பட்டன. ஜான்வி கபூர் டேட்டிங் செய்த மூன்று பேரின் பெயரை குஷியிடம் கேட்கிறார் கரண். இருந்தாலும் சொல்லாதே என்று ஜான்வி, குஷியை தடுத்தார்.

அதன் பிறகு, கரண், ஜான்வி கபூரிடம், "உங்கள் போனின் ஸ்பீட் டயல் பட்டியலில் உள்ள மூன்று பேர் யார்?" ஜான்வி வேகமாக பதிலளித்தாள். "பாப்பா (போனி கபூர்), குஷி, ஷிக்கு" என்கிறார் ஜான்வி. அவற்றுள் ஷிக்கு என்றால் ஷிகர் பஹாரி. ஷிக்கு என சொல்லியதும் ஜான்வி முகம் சிவந்து காணப்பட்டது. தப்பு பண்ணிட்டேன் என்று எக்ஸ்பிரஷன் கொடுத்தார். கரனும் விஷயம் வெளிப்பட்டு விட்டது போல் உரக்க சிரித்து கொண்டே நடந்தார்.

ஜான்வி, ஷிகர் பஹாரியாவின் டேட்டிங்கிற்கு ஏறக்குறைய ஒத்துப் போனார் , ஏனெனில் அவரது தொலைபேசி எண் ஸ்பீட் டயலில் உள்ளது. அவர் பெயரை சொல்ல வெட்கப்பட்ட விதத்தை பார்த்தால் புரியும் என நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியா.

ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் கலந்து கொண்ட காஃபி வித் கரண் எபிசோட் ஜனவரி 4 ஆம் தேதி டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா படத்தின் மூலம் டோலிவுட்டில் கால் பதிக்கிறார் ஜான்வி கபூர். இந்தப் படத்தில் ஜான்வி லங்காவோணியில் வசிக்கும் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். தேவாராவின் முதல் பார்வை சுவாரசியமாக இருந்தது. தேவாரா பகுதி-1 காட்சிகள் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும். மேலும் கொரட்டாலா சிவா இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.