நான் தான் வில்லன்.. நான் தான் ஹீரோ.. இரட்டை வேடங்களில் எம்ஜிஆர்.. அனல் பறந்த நினைத்ததை முடிப்பவன்
Ninaithadhai Mudippavan: இந்த திரைப்படத்தில் கிளைமாக்ஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹீரோ வில்லன் இருவரும் ஒரே உருவ ஒற்றுமையில் இருக்கின்ற காரணத்தினால் வில்லன் எம்ஜிஆர் தப்பிப்பதற்காக நல்லவர் எம்ஜிஆர் போல அப்படியே நடிப்பார்.
1975 ஆம் ஆண்டு 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘நினைத்ததை முடிப்பவன்’.இந்தத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 48 ஆண்டுகள் நிறைவடைந்து 49 ஆவது ஆண்டு தொடங்குகிறது.
இந்தியில் ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெற்றி பெற்ற சச்சா ஜூத்தா படத்தின் தழுவலே ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தின் கதை. இந்தத்திரைப்படத்தை இயக்குநர் ப.நீலகண்டன் இயக்கி இருந்தார்.
எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களில் இந்தப்படத்தில் தோன்றியிருந்தார்.அதில் ஒன்று பேண்ட் வாசிக்கும் அப்பாவி. இன்னொருவர் வில்லனான வைர வியாபாரி.
பொதுவாக எம்.ஜி.ஆருக்கு சரிக்கு சமமான வில்லனாக பார்க்கப்படுபவர் நம்பியார். ஆனால் இந்தத்திரைப்படத்தில் கொஞ்சம் மாறுதலாக, நம்பியார் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இரண்டு எம்.ஜி.ஆருக்கும் கனகச்சித கவர்ச்சி கதாநாயகிகளாக மஞ்சுளாவும் லதாவும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அப்போதுதான் இருவரும் நடிக்க வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆருடன் நடிக்கும் போது மஞ்சுளாவுக்கு வயது 21. லதாவிற்கு வயது 22. ஆனால் அவருக்கோ வயது 58.
படத்திற்கு எம்எஸ்வி இசையமைத்து இருந்தார். படத்தில் ‘ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து’ பாடலில் லதா காட்டிய கவர்ச்சி ரசிகர்களை திரையரங்குகளில் ரசிகர்களை கட்டிப்போட்டது.
அதே போல மஞ்சுளாவுக்கு குளியல் காட்சி. அந்தக்காலத்தில் அந்தக்காட்சி மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. படத்தில் சுவாரசியமான கதை இருந்தாலும், நாயகிகளின் கவர்ச்சிக்காகவே திரையரங்கை நோக்கி படையெடுத்தது இளைஞர் படை.. விளைவு படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப்படத்தில் இடம் பெற்ற ‘பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த பாடலும், ‘கண்ணை நம்பாதே’ இன்றும் பல்வேறு கச்சேரிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த எம்ஜிஆர் இன்று வரை தவிர்க்க முடியாத ஆகச்சிறந்த நாயகனாக திகழ்ந்து வருகிறார். இவர் நடித்து வெற்றி பெற்ற எத்தனையோ திரைப்படங்கள் ஹிந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது. நல்ல நேரம், பல்லாண்டு வாழ்க உள்ளிட்ட படங்கள் அனைத்தும் இந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது. அதேபோல இந்தியில் ராஜேஷ் கண்ணா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற சச்சே ஜூதா படத்தில் ரீமிக்ஸ் செய்து தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் நினைத்ததை முடிப்பவன்.
எம்ஜிஆரின் திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய வெற்றி படமாக இந்த திரைப்படம் அமைந்தது. சென்டிமென்ட் காட்சிகள் குறித்து சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இது. திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்று வரை தவிர்க்க முடியாத தமிழ் சினிமாவின் உச்ச இசையாக இருந்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் எம்ஜிஆர் ஹீரோ வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தையும் இரட்டை வேடத்தில் செய்திருப்பார். வில்லனாக நடித்திருக்க கூடிய எம்ஜிஆர் சொடக்கு போட்டு பேசும் வார்த்தைகள் திரையரங்குகளில் கர ஒலிகளை எழுப்ப வைத்தன. குறிப்பாக இந்த திரைப்படத்தில் நம்பியார் நல்லவனாக நடித்திருப்பார்.
குறிப்பாக இந்த திரைப்படத்தில் கிளைமாக்ஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹீரோ வில்லன் இருவரும் ஒரே உருவ ஒற்றுமையில் இருக்கின்ற காரணத்தினால் வில்லன் எம்ஜிஆர் தப்பிப்பதற்காக நல்லவர் எம்ஜிஆர் போல அப்படியே நடிப்பார்.
பார்க்கும் ரசிகர்களுக்கு வில்லன் யார்? நல்லவன் யார்? என்று தெரிந்தாலும் திரைப்படத்தில் இருக்கக்கூடிய சுவாரசியம் அனைவரையும் இருக்கையின் நுனியில் அமர வைத்தது. அனைவருமே உண்மையை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இறுதியில் தாய் பாசத்தை வைத்து வில்லன் எம்ஜிஆர் தானாக ஒத்துக் கொள்ளும் அளவிற்கு நாடகமாடி உண்மை கண்டுபிடிக்கப்படும்.
எந்த திரைப்படத்திலும் மது மற்றும் சிகரெட் உள்ளிட்ட கெட்ட பழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதனை நீக்கிய வண்ணம் நடிப்பார் எம்ஜிஆர். இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்க கூடிய எம்ஜிஆர் சிகரட்டை வாயில் வைக்கும் பொழுது நல்லவனாக இருக்கக்கூடிய எம்ஜிஆர் என்னுடைய உருவம் கூட சிகரெட் குடிக்க கூடாது என்று வில்லன் எம்ஜிஆர் கன்னத்தில் அறைந்து விடுவார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்த திரைப்படம் தான் இந்த நினைத்ததே முடிப்பவன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்