Thottal Poo Malarum: பி.வாசுவின் வாரிசு.. சக்தி வாசுவுக்கு நல்ல தொடக்கம்.. 17 ஆண்டுகள் தொட்டால் பூ மலரும்-it has been 17 years since the release of thottal poo malarum - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thottal Poo Malarum: பி.வாசுவின் வாரிசு.. சக்தி வாசுவுக்கு நல்ல தொடக்கம்.. 17 ஆண்டுகள் தொட்டால் பூ மலரும்

Thottal Poo Malarum: பி.வாசுவின் வாரிசு.. சக்தி வாசுவுக்கு நல்ல தொடக்கம்.. 17 ஆண்டுகள் தொட்டால் பூ மலரும்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 03, 2024 06:00 AM IST

Thottal Poo Malarum: தொட்டால் பூ மலரும் திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இது பி. வாசு எழுதி இயக்கிய இந்த படத்தில் அவரது மகன் சக்தி நாயகனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக கௌரி முன்ஜால் நடித்தார். மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், வடிவேலு , சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

பி.வாசுவின் வாரிசு.. சக்தி வாசுவுக்கு நல்ல தொடக்கம்.. 17 ஆண்டுகள் தொட்டால் பூ மலரும்
பி.வாசுவின் வாரிசு.. சக்தி வாசுவுக்கு நல்ல தொடக்கம்.. 17 ஆண்டுகள் தொட்டால் பூ மலரும்

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் நாயகன் சக்தி ஜாலியான அனைத்தையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும் இளைஞர். இவருக்கு கல்லூரியில் படிக்கும் கௌரி முன்ஜால் மீது காதல் மலர்கிறது. இருவரும் காதலிக்கிறார்கள். இதில் நாயகி அம்மா சுகன்யா பெரிய பணக்காரர். இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். பின்னர் தனது மகளை அண்ணன் மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார். பின்னர் மும்பையில் வரதராஜ வாண்டையார் ( ராஜ்கிரண் ) வீட்டிற்கு மகளை அனுப்பி வைக்கிறார்.

ராஜ்கிரண் மும்பையில் பெரிய தாதாவாக இருக்கிறார். பின்னர் சக்தி காதலியை தேடி மும்பை செல்கிறான். தனது உண்மையான அடையாளத்தை மறைத்து, வாண்டியர் குடும்பத்தில் நுழைகிறார்.அவர்களின் நம்பிக்கையை வென்ற ரவி, அஞ்சலியை திருமணம் செய்கிறாரா? இல்லையா? என்பது தான் மீதி கதை.

இப்படத்தில் வடிவேலுவின் காமெடி செம ஹிட். குறிப்பாக வரும் ஆனா வராது என்ற காமெடி. பின்னர் மும்பையில் தாதா நான் தான் என செய்யும் சில அலப்பறைகள் என படம் முழுவதும் நகைச்சுவையாக பயணம் செய்யும். சக்தி நண்பனாக சந்தானம் நடித்து அசத்தி இருப்பார். குறிப்பாக இப்படத்தில் பாடல் நல்ல ஹிட். யுவன் ஷங்கர் ராஜா தனக்கான பாணியில் அசத்தி இருப்பார்.

குறிப்பாக பேருந்தில் வரும் இப்பாடல்,

அரபு நாடே அசந்து நிற்கும்

அழகியா நீ

உருது கவிஞன் உமர்கயாமின்

கவிதையா ..ஹே ஹே ஹே

முகத்தை எப்போதும்

மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில்

முள்ளை தைக்காதே என்ற பாடல் அனைவரது விருப்ப பட்டியலிலும் இந்த பாடல் இன்று வரை இருந்து வருகிறது.

சிறுவயதில் அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரங்களின் பி.வாசு இயக்கத்தில் அவருடைய மகன் சக்தி நடித்திருந்தாலும் கதாநாயகனாக அவர் நடித்த முதல் திரைப்படம் இந்த தொட்டால் பூ மலரும். சிறப்பான ஆரம்பமாக இவருக்கு அமைந்திருந்தாலும் இதற்குப் பிறகு மிகப்பெரிய முன்னேற்றம் இவருக்கு கிடைக்கவில்லை.

இயக்குனர் பி.வாசுவின் முழு உழைப்பில் களம் இறக்கப்பட்டார். சக்தி. இயக்கம், தயாரிப்பு, கதை அனைத்தும் இயக்குனர் வாசுதான் வடிவேலு ராஜ்கிரன் இவர்கள் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கூற போனால் மொத்த திரைப்படத்தையும் தாங்கி இருப்பவர்கள் இவர்கள் இருவர்கள்தான். நகைச்சுவை நாயகனாக விளங்கக்கூடிய வடிவேலு மொத்த திரைப்படத்தையும் சலிப்பு இல்லாமல் கொண்டு சென்றிருப்பார்.

இயக்குனர் பி.வாசுவின் திரைப்படத்தில் நகைச்சுவைக்கு குறைய இருக்காது. அதை சரியான முறையில் தீர்த்து வைத்திருப்பார் நடிகர் வடிவேலு. நாயகனாக சக்திக்கு முதல் தரப்படமாக இருந்தாலும் சிறப்பாக பி.வாசு வேலை வாங்கி இருப்பார்.

இந்த திரைப்படத்தின் அடுத்த படம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இன்று வரை அரபு நாடு பாடல் மக்கள் மத்தியில் வெகு விமர்சையாக பாராட்டப்பட்டு வருகின்றது. இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றது அதற்கு யுவன் இசை தான் காரணம்.

இந்த திரைப்படத்தில் சக்தி மற்றும் கௌரி முன்ஜால் ஆகிய தவிர மிக அனைவரும் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்ட முகம் தான். அனைவரும் தமிழ் சினிமாவில் கை தேர்ந்த நடிகர்கள். அவர்களுக்கு மத்தியில் இந்த புதுமுகங்கள் ஈடு கொடுப்பது சற்று கடினமான விஷயமாக இருந்தாலும் அதனை ஓரளவு இரண்டு புது முகங்களும் சரி செய்து இருப்பார்கள். இருப்பினும் சக்திக்கு இது ஒரு நல்ல தொடக்கம்தான். இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 17 ஆண்டுகளாகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.