Indira: கௌதமை திருமணம் செய்ய முடிவெடுக்கும் இந்திரா.. ஜெயாவின் முடிவு என்ன?
இந்திரா சீரியலின் இன்றைய அப்டேட் பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இந்திரா.
இந்த சீரியலில் கதிர் காவியாவின் கர்ப்பத்தை கலைக்க முயன்ற நிலையில் இந்திரா அதை தடுத்து நிறுத்தினாள். இதையடுத்து வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது, தொடர்ந்து கௌதமின் திருமணம் தடைப்பட்டு கொண்டே வருவதால் ஜெயா அதற்காக பரிகாரம் செய்ய முடிவெடுக்கிறாள். ஆனால் ராகினி இந்திராவால் தான் கௌதம் கல்யாணம் தடைபடுகிறது என அவளை வைத்தே பரிகாரம் செய்ய திட்டமிடுகிறாள்.
இதனால் இந்திரா கௌதமை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? இந்திராவின் ஆசைப்படி கௌதமை கரம் பிடிப்பாளா? ஜெயா இதற்கு சம்மதம் தெரிவிப்பாளா? என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே இந்திரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்