Indian Film Festival: சிறந்த இயக்குநர் நித்திலன்.. சிறந்த நடிகை பார்வதி.. இந்திய திரைப்பட திருவிழா! - விருது பட்டியல்
Indian Film Festival: அமீர்கானின் முன்னாள் மனைவியும் இயக்குநருமான கிரண் ராவ் இயக்கிய லாபதா லேடீஸ் திரைப்படம் சிறந்த விமர்சகர்கள் தேர்வு திரைப்படமாக அறிவிக்கப்பட்டது. - விருது பட்டியல்!
ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் வெற்றிபெற்ற திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு விபரங்களை இங்கே பார்க்கலாம். இதனை ஐ.எஃப்.எஃப்.எம் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது.
சிறந்த நடிகராக கார்த்திக் ஆர்யன்
அதன் படி, மெல்போர்னில் நடைபெற்ற திரைப்பட விழாவில், 12th ஃபெயில் திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. சந்து சாம்பியன் திரைப்படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அமீர்கானின் முன்னாள் மனைவியும் இயக்குநருமான கிரண் ராவ் இயக்கிய லாபதா லேடீஸ் திரைப்படம் சிறந்த விமர்சகர்கள் தேர்வு திரைப்படமாக அறிவிக்கப்பட்டது.
பார்வதிக்கு சிறந்த நடிகைக்கான விருது
மலையாள திரைப்படமான உள்ளொழுக்கு திரைப்படத்தில் நடித்த நடிகை பார்வதி திருவோத்து சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டார். சிறந்த இயக்குநர்களாக, சந்து சாம்பியன் படத்தை இயக்கிய கபீர் கான் மற்றும் விஜய் சேதுபதி இயக்கத்தில் அண்மையில் வெளியாகி 100 கோடிக்கும் மேலே வசூல் செய்த மகாராஜா திரைப்படத்தின் இயக்குநரான நித்திலன் சுவாமிநாதன் அறிவிக்கப்பட்டனர்.
சிறந்த நடிப்பில் விமர்சகர்கள் தேர்வை பொருத்தவரை, 12th ஃபெயில் திரைப்படத்தில் நடித்த விக்ரம் மாஸ்ஸி சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டார். இந்திய கலை மற்றும் கலாச்சாரத்திற்கான தூதராக நடிகர் ராம் சரண் அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த இணையத் தொடராக கோஹ்ரா அறிவிக்கப்பட்டது.
சமத்துவ சினிமாவிற்கான விருது
சமத்துவ சினிமாவிற்கான விருது டன்கி திரைப்படத்திற்கும், துணைக் கண்டத்திற்கான சிறந்த படத்திற்கான விருது தி ரெட் சூட்கேஸ் படத்திற்கும் கொடுக்கப்பட்டது. ரன்வீர் சிங் - ஆலியா பட் நடிப்பில் வெளியான ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி மக்கள் தேர்வு செய்த திரைப்பட விருதை வென்ற நிலையில், அமர் சிங் சம்கிலா பிரேக் அவுட் திரைப்பட விருதுனை தட்டிச்சென்றது. தாக்கத்தை ஏற்படுத்தியவராக நடிகர் ஆதர்ஷ் கௌரவ் அறிவிக்கப்பட்ட நிலையில், பன்முகத்தன்மை கொண்ட திறமையாளர் விருது நடிகை ரசிகா துகலுக்கு கொடுக்கப்பட்டது.
போச்சர் இணையத்தொடரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை நிமிஷா சஜயன் சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேட் இன் ஹெவன் சீசன் 2 இணையத்தொடரில் சிறந்த நடிப்பை கொடுத்த நடிகர் அர்ஜுன் மாத்தூர் சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது.
விமர்சகர்கள் தேர்வில் ராப்சர் படத்தை இயக்கிய டொமினிக் சிறந்த இருக்குநருக்கான விருதை வென்ற நிலையில், தி வெஜிமைட் சாண்ட்விச் திரைப்படத்தை இயக்கிய ராபி ஃபேட்டுக்கு குறும்படத்திற்கான விருது கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதே போல சிறப்பு பிரிவில் எக்கோ குறும்படத்தை இயக்கிய சந்தீப் ராஜூக்கு விருது கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்புடையை செய்திகள்