MTV Splitsvilla X5: ஒருத்தரை உண்மையாவே நேசிச்சா இதை மட்டும் பண்ணுங்க.. காதலின் அர்த்தத்தை புரிய வைத்த சன்னி லியோன்!
ஒருத்தரை உண்மையாவே நேசிச்சா இதை மட்டும் பண்ணுங்க, காதல் உங்களை சேர்த்து வைத்துவிடும் என எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா லேட்டஸ்ட் எபிசோடில் காதலின் அர்த்தத்தை புரிய வைத்தார் சன்னி லியோன்

எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா சீசன் 5:எக்ஸ்க்யூஸ் மீ ப்ளிஸ் என்ற டேட்டிங் ரியாலிட்டி ஷோ தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களை கவர குயின் ஆஃப் ஹார்ட்ஸ் சன்னி லியோன் தான் முக்கிய காரணமாக உள்ளார்.
காதல் உங்களை சேர்த்துவிடும்
காதல், துரோகம், வெறுப்பு உச்சம் அடையும் போது, என்ன செய்ய வேண்டும் என்கிற சூப்பரான டிப்ஸை இந்த நிகழ்ச்சியின் புதிய எபிசோடில் சன்னி லியோன் கூறியுள்ளார். இதுபற்றி சன்னி லியோன், "ஒருவர் உங்களை விட்டு பிரிய வேண்டும் என நினைத்தால், விட்டு விடுங்கள். அவர்களை நீங்கள் உண்மையாக நேசித்தால், பிரிந்து சென்றவரும் மீண்டும் உங்களைத் தேடி வந்து உன்னை தான் அதிகம் விரும்புகிறேன் எனச் சொல்வார்” என ஸ்பிளிட்ஸ்வில்லா நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு காதலின் தத்துவத்தை நடிகை சன்னி லியோன் கூறினார்.
கடந்த வாரம் கடுமையான இரட்டை சவால்கள் முடிந்து போட்டியாளர்கள் வில்லாவுக்கு திரும்பினர், கவர்ச்சியான டோம் அமர்வுக்கு தயாராக இருந்த நிலையில், புதிய எதிரிகளிடையே சூடான வாக்குவாதங்களால் வில்லாவில் பிரச்னைகள் வெடித்தன.