HT OTT SPL: ‘வெளிநாட்டில் கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் மனைவி, மீட்க புறப்படும் கணவன்’-ht ott special khuda haafiz is a 2020 indian hindi language action thriller film - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Ott Spl: ‘வெளிநாட்டில் கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் மனைவி, மீட்க புறப்படும் கணவன்’

HT OTT SPL: ‘வெளிநாட்டில் கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் மனைவி, மீட்க புறப்படும் கணவன்’

Manigandan K T HT Tamil
Jan 23, 2024 05:45 AM IST

நர்கிஸ் கதாபாத்திரத்தில் ஷிவலீகா ஓபராய் நடித்துள்ளார். பார்க்க அப்பாவியான முகம், இந்தக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. நோமனை சுற்றி சுற்றி படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

Khuda Haafiz படத்தின் போஸ்டர்
Khuda Haafiz படத்தின் போஸ்டர் (HT)

மாதங்கள் உருண்டோட வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர் கணவன்-மனைவியான இருவரும். பின்னர், வெளிநாட்டில் சென்று பிழைக்கலாம் என முடிவு செய்து. நோமன் என்ற நாட்டிற்கு (படத்திற்காக கற்பனையான நாடு) செல்ல வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர். வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் ஏஜென்சி, நர்கிஸுக்கு உடனடியாக வேலை கிடைத்து விட்டது என கூறுகிறார். சமீருக்கு அடுத்த சில தினங்களில் வேலை கிடைத்துவிடும் பின்னர் நீங்களும் என்று கூறிவிட்டுச் செல்கிறார்.

ஒரு சில தினங்கள் தானே சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில், நர்கிஸ் சில பெண்களுடன் நோமனுக்கு செல்கிறார். ஆனால், அங்கு சென்ற பிறகு, பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கப்படுகிறார்.

இத்தகவலை எப்படியோ கணவர் சமீரிடம் கூற, என்ன செய்வதென்று தெரியாமல் சமீர், உடனடியாக நோமன் செல்கிறார். டூரிஸ்ட் விசாவில் செல்லும் அவர், தனது மனைவி கண்டுபிடித்தாரா? இதற்கு காரணமானவர்கள் யார்? என்பதே Khuda Haafiz படத்தின் பரபர திரைக்கதை.

ஒரு திரைப்படம் வெற்றி அடைவதற்கு கதையும், திரைக்கதையுமே பிரதானம். அவை இரண்டு சரியாக இருந்துவிட்டால் அப்படத்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். அது இந்தப் படத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. ஆக்ஷன் களமான கதையில் அதிக ஆக்ஷனை புகுத்தாமல் புத்திசாலித்தனமாக கதையின் நாயகன் செயல்படுவது போல் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது சிறப்பு.

அதேநேரம், தேவைப்படும் பொழுது சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. சமீருக்கு உதவும் கால் டாக்சி டிரைவர் கதாபாத்திரம், இந்தியத் தூதர் கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரம் கூட மனதில் கச்சிதமாக பதிகிறது.

பரபரப்பான ஆக்ஷன் படத்திற்கு இசையை மிதுன் வழங்கியுள்ளார். சமீர் கதாபாத்திரத்தில் வித்யூத் ஜாம்வால் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, பாலியல் தொழில் நடக்கும் இடத்தில் மனைவியின் புகைப்படத்தை பார்க்கும் சமயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கைகள் உதறுவதாகட்டும், அவர்களை எதிர்த்து கோபமாக சண்டையிடும் காட்சியாகட்டும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

நர்கிஸ் கதாபாத்திரத்தில் ஷிவலீகா ஓபராய் நடித்துள்ளார். பார்க்க அப்பாவியான முகம், இந்தக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது.

வெளிநாட்டுக்கு வேலை செல்லும்போது எத்தனை கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் படமாக Khuda Haafiz இருக்கிறது. இன்றும் பலர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறப்படுவதை நம்பி, பொய்யமான ஏஜென்சிகளில் பணத்தை கொடுத்து அங்கு சென்று வேலையில்லாமல் கிடைத்த வேலையை செய்து கொண்டும், நாடு திரும்ப முடியாமல் கஷ்டப்படுவதும் நடக்கத்தான் செய்கின்றன.

இயக்குநர் சேரன் வெற்றிக் கொடி கட்டு என்ற படத்தின் மூலம், வெளிநாட்டு வேலை மோசடி பற்றி கூறியிருப்பார். அந்த வரிசையில் இந்த Khuda Haafiz படமும் இடம்பெறுகிறது.

இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Khuda Haafiz: Chapter 2 – Agni Pariksha என்ற படமும் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2020இல் வெளியான Khuda Haafiz டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.