ஒரே படம் தான்!உலக புகழ் பெற்ற டைட்டானிக் கதாநாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ பிறந்தநாள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒரே படம் தான்!உலக புகழ் பெற்ற டைட்டானிக் கதாநாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ பிறந்தநாள்!

ஒரே படம் தான்!உலக புகழ் பெற்ற டைட்டானிக் கதாநாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ பிறந்தநாள்!

Suguna Devi P HT Tamil
Nov 11, 2024 07:11 AM IST

கலை உலகில் தன்னை நிலை நிறுத்தி உலக அளவில் புகழ் பெற்ற ஒரு நடிகர் தான், லியானார்டோ டிகாப்ரியோ. இவரது டைட்டானிக் என்ற ஒரே படத்தின் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலமானார். இன்று(நவம்பர் 11 ) அவரது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஒரே படம் தான்!உலக புகழ் பெற்ற டைட்டானிக் கதாநாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ பிறந்தநாள்!
ஒரே படம் தான்!உலக புகழ் பெற்ற டைட்டானிக் கதாநாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ பிறந்தநாள்!

உலகின் காதல் நாயகன் 

அரை நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் ஹாலிவுட் உலகில் காதல் நாயகனாக ஜொலித்து வருகிறார். 1997 ஆம் ஆண்டு ஜேம்ஸ் காமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் படத்தின் வழியாக உலகம் முழுவதும் காதல் நாயகனாக அறியப்பட்டவர். இப்படத்தில் இவர் நடித்த ஜாக் கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டது வருகிறது. இதற்கு முன்னதாக ரோமியோ ஜூலியட் எனும் காதல் காவியத்தில் நடித்து இருந்தார். 1991 ஆம் ஆண்டு ஹாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தாலும், 4 ஆண்டுகளுக்கு பின் தான் உலக ரசிகர்களால் அறியப்பட்டார். 

உன்னதமான கலைஞன் 

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் 1974 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார் டிகாப்ரியோ,  இவரது முழுப்பெயர் லியனார்டோ வில்ஹம் டிகாப்ரியோ என்பதாகும். இவரது தாய் இர்மெலின் இண்டன்பிர்கென் தான் இவருக்கு புகழ்பெற்ற ஓவியரின் டா வின்சியைப் போலவே வர வேண்டும் என லியானார்டோ எனப் பெயர் வைத்துள்ளார்.  முதலில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். இதுவரை ஏறத்தாழ 37 படங்களில் நடித்துள்ளார். 1993இல் நடித்த What's Eating Gilbert Grape படத்திற்காக ஆஸ்காருக்காக முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டார். 19 வயதில் ஆசகாருக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் நடிகரும் இவர் தான். 

இவர் Django Unchained என்ற படத்தில் ஒரு காட்சியில் நடித்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக இவரது கையில் அடிப்பட்டு ரத்தம் சொட்டியுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் அந்த காட்சியை நடித்து முடித்துள்ளார். மேலும் இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்று கொடுத்த The Revenant என்ற திரைபடத்தில் இவர் நீண்ட நாள் பசியில் ஒரு எருமைக் கறியை திண்பது போல ஒரு காட்சி வரும். அந்த காட்சியில் அவர் உண்மையிலேயே அந்த கரியாய் பச்சையாக தின்று நடித்துள்ளார். முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் ஒரு சைவ உணவுகளை மட்டும் சாப்பிடக்கூடியவர். இவரது அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் உன்னதமான நடிப்பை வெளிப்படுத்தியது.  

கண்ணாமூச்சி விளையாடிய ஆஸ்கார் 

இந்த மாபெரும் கலைஞனுக்கு ஆஸ்கார் விருது அவ்வளவு எளிதாக கிடைத்து விட வில்லை. இவர் நடித்த டைட்டானிக் படத்திற்கு 11 விருதுகள் கிடைத்த போதிலும் இவருக்கு கிடைக்க வில்லை. இதனையடுத்து தொடர்ந்து 2 தசாப்தங்களாக முயற்சி செய்து 5 முறை ஆஸ்காருக்காக பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால் 22 வருடங்கள் கழித்து The Revenant படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றார். சுற்றுசூழல் ஆர்வலரான இவருக்கு உலகிலேயே மிகவும் பிடித்த இடம் ஒன்று இந்தியாவில் தான் உள்ளது. அது தான் ராமக்கல் மேடு. இது தமிழ்நாடு மற்றும் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.